டாக்டர் சி. வி. இராமன் பல்கலைக்கழகம்
டாக்டர் சி. வி. இராமன் பல்கலைக்கழகம் (Dr. C.V. Raman University, Bihar), பீகார் என்பது ஓர் தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் பகவான்பூரில் அமைந்துள்ளது. பீகார் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2013இன் கீழ் அகில இந்திய மின்னணு மற்றும் கணினி தொழில்நுட்ப சமூகத்தின் சார்பில் இந்த பல்கலைக்கழகம் 2018இல் நிறுவப்பட்டது.[3] பீகாரில் நிறுவப்பட்ட ஆறு தனியார் பல்கலைக்கழகங்களில் இது நான்காவதாகும். முதல் இரண்டு தனியார் பல்கலைக்கழகமான கே.கே பல்கலைக்கழகம் மற்றும் சந்தீப் பல்கலைக்கழகம், சிஜோல் தொடர்ந்து பாட்னாவின் அமிட்டி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[4] இந்த பல்கலைக்கழகத்தைப் பீகார் அமைச்சரவை 10 ஜனவரி 2018 அன்று அங்கீகரித்தது,[5] 7 பிப்ரவரி 2018 அன்று அரசு செய்திக்குறிப்பில் அறிவித்தது.[6] ஜூலை 2018 கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகம் செயல்படத்துவங்கியது.[7] இப்பல்கலைக்கழகம் ஐந்து பிரிவுகளில் பல்வேறு பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. இதற்கு நாட்டின் முதல் நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமனின் பெயரிடப்பட்டது.[5]
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2018 |
வேந்தர் | விஜய் காந்து வெர்மா[1] |
துணை வேந்தர் | இராகேசு குமார் பாண்டே[1] |
அமைவிடம் | பகவான்பூர், வைசாலி , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
பாடத் துறைகள்
தொகுஇந்த நிறுவனம் பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை ஐந்து பாடப் பிரிவுகள் மூலம் வழங்குகிறது:[8]
- வணிக மற்றும் மேலாண்மை
- கலை மற்றும் மானுடவியல்
- அறிவியல்
- கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- வேளாண்மை
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Governing Bodies". www.cvrubihar.ac.in. Dr. C.V. Raman University. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.
- ↑ "State-wise List of Private Universities as on 25.09.2018" (PDF). www.ugc.ac.in. University Grants Commission. 25 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 October 2018.
- ↑ "Bihar Private Universities Act, 2013" (PDF). Bihar Gazette. Government of Bihar. 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
- ↑ "Six private universities to come up in Bihar soon". United News of India. 9 March 2018. http://www.uniindia.com/six-private-universities-to-come-up-in-bihar-soon/states/news/1162869.html. பார்த்த நாள்: 4 November 2018.
- ↑ 5.0 5.1 "Pvt technical varsity among proposals okayed by Bihar cabinet". Business Standard India. Press Trust of India. 10 January 2018. https://www.business-standard.com/article/pti-stories/pvt-technical-varsity-among-proposals-okayed-by-bihar-cabinet-118011001176_1.html. பார்த்த நாள்: 5 November 2018.
- ↑ "Ordinary notification 6 of 2018" (PDF). Bihar Gazette. Government of Bihar. 7 February 2017. Archived from the original (PDF) on 5 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.
- ↑ "AISECT Group of Universities signs MoU with the Government of Assam to set up Dr. C.V. Raman University in the State - India Education Diary". India Education Diary. 10 February 2018. http://indiaeducationdiary.in/aisect-group-universities-signs-mou-government-assam-set-dr-c-v-raman-university-state-2/. பார்த்த நாள்: 5 November 2018.
- ↑ "About CVRU University". cutmap.ac.in (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.