டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.[1]

கலப்புத் திருமணம் முதல்வகை

தொகு

தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

தொகு
  1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  2. பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  3. வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  4. திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை

தொகு
  • ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.

கலப்புத் திருமணம் இரண்டாம்வகை

தொகு

தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

தொகு
  1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
  2. பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
  3. வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
  4. திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை

தொகு
  • ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க

தொகு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. அஞ்சுகம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் பெயர் மாற்றம்[தொடர்பிழந்த இணைப்பு]