டாக்டர் வட்சன் (வழுநீக்கி)

டாக்டர் வட்சன் மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் சேர்ந்திருக்கும் பிரயோகங்களுக்கான ஒரு வழுநீக்கி ஆகும். இது பொதுவாக இயங்குதளங்களிற்கு ஏற்ப drwatson.exe அல்லது drwtsn32.exe அல்லது dwwin.exe என்றவாறு அழைக்கப்படும். இதில் யுத்தி என்னவென்றால் பிரச்சினை ஏற்பட்டவுடன் அதன் குணங்களைக் கண்டறிவதாகும். இதைத் தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளப் பிரச்சினைகளிற்கும் இந்தப் பெயரால் அழைக்கத் தொடங்கினர். [1]

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் ஆரம்பிக்கப்பட்ட டாக்டர் வட்சன்.

நிரல்களில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவதற்கு டாக்டர் வட்சன் இனால் பதிவுசெய்யப்படும் தரவு போதுமானதாகும். ஏதாவது பிரச்சினை ஏற்படும் பொழுது Drwtsn32.log என்ற கோப்பு உருவாக்கப்படும். இதை நிரலாகர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். Crash dump கோப்பும் டாக்டர் வட்சன் ஊடாக உருவாக்கிக் கொள்ளலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Why is Windows Error Reporting nicknamed "Dr. Watson"?". பார்க்கப்பட்ட நாள் 2006-05-21.