டாப் ஸ்டேஷன்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
டாப் ஸ்டேஷன் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணன் தேவன் மலைகளில் ஒரு பகுதியாக உள்ளது. இது மூணாறில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரிய நீலக்குறிஞ்சி மலர்கள் பிரபலமாக உள்ளது. இதனருகில் குறிஞ்சிமலா சரணாலயம் இருக்கிறது.[1][2][3]
டாப் ஸ்டேஷன் மூணாரிலிருந்து போடிநாயக்கனூர்க்கு தேயிலை விநியோகிப்பதற்கான முனையமாக இருந்தது. டாப் ஸ்டேஷனிலிருந்து போடிநாயக்கனூர்க்கு வான்வழி இழுவை வண்டி (ropeway)
மூலம் தேயிலை கொண்டு செல்லப்பட்டது. வான்வழி இழுவை வண்டி (ropeway) மலை முகட்டிலிருந்து செங்குத்தான பாறை மேலே 1902 ல் கட்டப்பட்டது. பழைய கொடைக்கானல்-மூணாறு சாலை டாப் ஸ்டேஷன் வழியாக செல்கிறது.