டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம்

டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம் (Encyclopedia of DNA Elements) எனவும் ஆங்கில சொல்சுருக்கமான என்கோடு (ENCODE) எனவும் அறியப்படும் இந்த பொது ஆராய்ச்சி கூட்டமைப்பு[2] செப்டம்பர் 2003இல் அமெரிக்க தேசிய மனித மரபணுத்தொகுதி ஆராய்ச்சி கழகத்தால் NHGRI) நிறுவப்பட்டது.[3][4][5][6] இதன் இலக்காக மனித மரபணுத்தொகுதியின் அனைத்து செயற்கூறுகளையும் கண்டறிவதாகும்; மனித மரபணுத்தொகைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு தேசிய மனித மரபணுத்தொகுதி ஆராய்ச்சி கழகத்தின் முதன்மையான திட்டமாக இது விளங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக கிடைக்கும் தரவுகள் உடனுக்குடன் பொது தரவுத்தளங்கில் பகிரப்படும்.

டிஎன்ஏ அங்கங்களின் தகவற்களஞ்சியம்
உள்ளடக்கம்
விவரம்முழுமையான மரபகராதி தரவுகள்
தொடர்பு
ஆய்வு மையம்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
ஆய்வகம்இசுட்டான்போர்டு மரபணு தொழில்நுட்ப மையம்: செர்ரி ஆய்வகம்; இதற்கு முன்னர்: கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா குரூசு
ஆசிரியர்கள்யூரி எல். ஆங் மற்றும் 17 பேர்[1]
முதன்மைக் குறிப்புரை26980513
வெளியிட்ட நாள்2010 (2010)
அணுக்கம்
வலைத்தளம்encodeproject.org
கருவிகள்
ஏனையவை

செப்டம்பர் 5, 2012 அன்று, இத்திட்டத்தின் துவக்க முடிவுகள் ஒருங்கிணைந்த 30 ஆய்வுத்தாள்களாக இயற்கை, மரபணுத்தொகை உயிரியல், மற்றும் மரபணுத்தொகை ஆய்வு போன்ற அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டது.[7][8] இந்த வெளியீடுகள் முன்பு "பயனில்லாதவை" எனக் கருதப்பட்ட மனித மரபணுத்தொகையில் குறைந்தது 80% குறிமுறையற்ற உயிரியல் செயல்பாட்டுடன் இருப்பதாக காட்டுகின்றன. மனித மரபணுத்தொகையில் 98% வரை குறிமுறையற்றதாக இருப்பதால் இந்தக் கண்டறிதல் மிகவும் முகனையான ஒன்றாகும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Principles of metadata organization at the ENCODE data coordination center. (2016 update)". Database 2016: baw001. January 2016. doi:10.1093/database/baw001. பப்மெட்:26980513. 
  2. Maher B (2012). "ENCODE: The human encyclopaedia". Nature 489 (7414): 46–48. doi:10.1038/489046a. 
  3. Raney BJ, Cline MS, Rosenbloom KR, Dreszer TR, Learned K, Barber GP, Meyer LR, Sloan CA, Malladi VS, Roskin KM, Suh BB, Hinrichs AS, Clawson H, Zweig AS, Kirkup V, Fujita PA, Rhead B, Smith KE, Pohl A, Kuhn RM, Karolchik D, Haussler D, Kent, WJ (January 2011). "ENCODE whole-genome data in the UCSC genome browser (2011 update)". Nucleic Acids Res. 39 (Database issue): D871–5. doi:10.1093/nar/gkq1017. பப்மெட்:21037257. 
  4. எஆசு:10.1371/journal.pbio.1001046
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  5. . பப்மெட்:17571346. 
  6. . பப்மெட்:16925836. 
  7. "ENCODE project at UCSC". ENCODE Consortium. பார்க்கப்பட்ட நாள் 2012-09-05.
  8. Fergus Walsh (2012-09-05). "Detailed map of genome function". BBC News இம் மூலத்தில் இருந்து 2012-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ASmAMpP9?url=http://www.bbc.co.uk/news/health-19202141. பார்த்த நாள்: 2012-09-06. 

வெளி இணைப்புகள்

தொகு