டிஓஐ-1452 (TOI-1452) என்பது திராக்கோ விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் அமைப்பாகும். இது சூரியனில் இருந்து 96 வானியல் அலகுகளால் பிரிக்கப்பட்ட மங்கலான செங்குறுமீன்களின் இரும இணை ஆகும். இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க கூறுபாடு , இந்த விண்மீன்களில் ஒன்றைச் சுற்றி TOI-1452 பி எனும் ஒரு புறக்கோள் இருப்பது ஆகும். [3]

TOI-1452
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Draco_(constellation)
வல எழுச்சிக் கோணம் 19h 20m 41.73s[1]
நடுவரை விலக்கம் 73° 11′ 43.5″[1]
இயல்புகள்
விண்மீன் வகைM4[2]

கண்ணோட்டம் தொகு

டிஓஐ-1452 புவியிலிருந்து 99 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

புறக்கோள் தொகு

2022 ஆம் ஆண்டில், டிஓஐ1452பி என்று பெயரிடப்பட்ட இந்த புறக்கோள் 11 நாட்க ள் அலைவுநேர வட்டணையில் விண்மீனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. இந்தக் கோள், புவியை விட 1.672 மடங்கு பொருண்மை கொண்ட கடலால் மூடப்பட்ட சூப்பர் பூமியாகும்.

நோக்கீடு தொகு

சிறிய தொலைநோக்கிகள் மூலம் பார்க்க முடியாத அளவுக்கு விண்மீன் அமைப்பு மிகவும் மங்கலாக உள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "SAO Star Catalog". HEASARC. NASA's High Energy Astrophysics Science Archive Research Center. பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.
  2. 2.0 2.1 "TOI-1452 Star Information". பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.
  3. "Discovery of Ocean World with the CFHT". பார்க்கப்பட்ட நாள் 2023-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஓஐ-1452&oldid=3831664" இலிருந்து மீள்விக்கப்பட்டது