டிரிஃப்ட் பாலம்

டிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது ஆல்ப்ஸ் மலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய, தொங்கு பாலங்களில் மிக நீண்டதாகும். இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி), உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்[1].

டிரிஃப்ட் பாலம்

டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் 20,000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு முந்தைய பாலம் 2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தற்போதைய புதிய பாலம் 2009, ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரிஃப்ட்_பாலம்&oldid=1353323" இலிருந்து மீள்விக்கப்பட்டது