டிஸ்பிராக்சியா


பேச்சு, ஒலி ஒழுங்கின்மை (disparaxia) என்பது ஒரு குழந்தை,தன்னுடைய அன்றாட செயல்பாடுகளில் ஈடுபட முடியாமலோ,அல்லது கடினமாக உணர்ந்தாலோ,குதித்தல்,தெளிவாக பேசாதிருத்தல்,பென்சிலை சரிவர பிடிக்க இயலாமை போன்றவை இருந்தால் அக்குழந்தைக்குப் பேச்சு,ஒலி ஒழுங்கின்மை உள்ளது எனலாம்.

இது தசைத்தளர்வோ அல்லது குறைந்த அறிவாற்றலோ போன்ற அறிகுறி இல்லை.இது ஒரு மூளை சார்ந்த நிலை, உடல் இயக்கச் செயல்பாடுகளை மூளையின் செயல்பாடுகளோடு ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல் ஆகும்.

இச்சிக்கலுக்கு வளர்ச்சி ஒருங்கிணப்பு ஒழுங்கின்மைகள், இயக்க உணர்தல் குறை, இயக்கத் திட்டமிடல் குறை, பேச்சுக் குழறல் போன்ற பெயர்களும் உண்டு.

சிக்கல் காரணம்

தொகு

மரபுவழி,நரம்புக்கலக் குறைபாடு,குறைந்த எடையாக இருப்பது, கருப்பையில் சாராய மிகை ஆகியன முதன்மையான காரணங்கள் ஆகும்.

அறிகுறி

தொகு

மற்ற குழந்தை போல் பந்து எறிதல்,மூன்று சக்கரவண்டி ஓட்டுதல் போன்ற செயல்களை செய்வதில் சிரமம், புதிர் விளையாட்டு, வீடு கட்டுதல் ,பொம்மை விளையாட்டில் பங்கேற்பதில் சிரமம்.

களைதல்
தொகு

பேச்சு மருத்துவம், இயன்மருத்துவம், செயல் மருத்துவம், தனிமுறைக் கலவி ஆகியவற்றின் வழியாகப் பயிற்சி அளித்து இச்சிக்கல் நீக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. பாண்டியராஜன் (2017). விழுது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம். p. 26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்பிராக்சியா&oldid=3743006" இலிருந்து மீள்விக்கப்பட்டது