தி. ந. கிருட்டிணமூர்த்தி

இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்சியாளர்
(டி. என். கிருஷ்ணமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவலம் நடராசன் கிருட்டிணமூர்த்தி (Tiruvalam Natarajan Krishnamurti) என்பவர் ஓர் இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளா் ஆவார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலப் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற வானிலையியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார் [1].

வாழ்க்கை

தொகு

கிருட்டிணமூர்த்தி 1959 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். புளோரிடா மாநில ஆசிரியராகப் பணியில் சேர்வதற்கு முன்னர் இவர் லாசு ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்.

2006 ஆம் ஆண்டு An Introduction to Global Spectral Modeling, Second Edition, Springer, 317 pp. Textbook என்ற நூலுக்கு எச்.எசு.பேடி, வி.எம்.ஆர்டிகர் மற்றும் எல்.ராமசாமி ஆகியோருடன் இணைந்து இணை ஆசிரியராக பணியாற்றினார்.

அமெரிக்க வானியல் சமூகம் 1985 ஆம் ஆண்டு இவருக்கு காரல்-கசுடாஃப் ரோசுபை ஆய்வு பதக்கம் வழங்கி சிறப்பித்தது.

1996 ஆம் ஆண்டு உலக வானியல் ஆய்வு நிறுவனத்தின் அனைத்துலக வானிலை ஆய்வு நிறுவனப் பரிசை வென்றார் [1].

2012 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு சமுகத்தினர் அவர்களுடைய சர் கில்பர்ட்டு வாக்கர் தங்கப் பதக்கத்தை வழங்கி சிறப்பு சேர்த்தனர் [2]. 2012 ஆம் ஆண்டு அமெரிக்க வானியல் ஆய்வு சமூகம் நியூ ஓரிலேனில் நடத்திய அவர்களின் ஆண்டு கூட்டத்தில் இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஒரு கருத்தரங்கை நடத்தியது [3].

கிருட்டிணமூர்த்தி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இறந்தார் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Meet Dr. Tiruvalum N. (T.N.) Krishnamurti: Lawton Distinguished Professor of Meteorology, Florida State University, நாசா, June 1, 2005, retrieved 2015-04-14.
  2. Phillips, Tifffany (September 13, 2012), T. N. Krishnamurti awarded the Sir Gilbert Walker Gold Medal, Florida State University Office of Faculty Recognition, archived from the original on April 15, 2015.
  3. T. N. Krishnamurti Symposium, American Meteorological Society, retrieved 2015-04-14.
  4. World-renowned FSU professor passes away
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ந._கிருட்டிணமூர்த்தி&oldid=4025368" இலிருந்து மீள்விக்கப்பட்டது