டி. ஏ. கே. இலக்குமணன்

டி. ஏ. கே. இலக்குமணன் (T. A. K. Lakkumanan, பி. 1939) ஒரு தமிழக அரசியல்வாதி. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 19 வது வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் பின்னர் நெல்லை தூத்துக்குடி ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட பொருளாளராக 8 ஆண்டுகள், பிரிக்கப்பட்ட நெல்லை மாவட்ட செயலாளராக 8 ஆண்டுகள் (1987 முதல் 1994 வரை), திமுகவில் பணியாற்றியுள்ளார். திமுகவிலிருந்து வைகோ வெளியேறியபோது அவருடன் வந்த 8 மாவட்ட செயலாளர்களுள் இவரும் ஒருவர். அதன்பின் நெல்லை மாவட்ட மதிமுக செயலாளராகவும் ,தலைமை ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகவும் 9 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின் 2003 இல் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அரசியலில் ஒதுங்கி இருந்த இவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக இவரது வீட்டிற்கு சென்று மதிமுகவிற்கு அழைத்து சென்றார். தற்பொழுது இவர் மதிமுகவின் தலைமை அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.[1]

டி. ஏ. கே. இலக்குமணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 27, 1939 (1939-08-27) (அகவை 84)
திருநெல்வேலி
அரசியல் கட்சிமதிமுக
துணைவர்மாணிக்கவல்லி
பிள்ளைகள்4 மகள்கள்
வாழிடம்திருநெல்வேலி

மேற்கோள்கள் தொகு

  1. "மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்". Archived from the original on 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 2015-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஏ._கே._இலக்குமணன்&oldid=3556531" இலிருந்து மீள்விக்கப்பட்டது