டி. ராஜா (நீதிபதி)


டி. ராஜா (பிறப்பு 25 மே 1961) ஒரு இந்திய நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்தார்.

மாண்புமிகு செயல் தலைமை நீதிபதி (ஓய்வு)
டி. ராஜா
செயல் தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
22 செப்டம்பர் 2022 – 24 மே 2023
நியமிப்புதிரௌபதி முர்மு
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
31 மார்ச் 2009 – 21 செப்டம்பர் 2022
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மே 1961 (1961-05-25) (அகவை 63)
தேனூர், மதுரை

கல்வி

தொகு

ராஜா மே 25, 1961 இல், இந்தியாவின் மதுரை, தேனூரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1988 ல் வழக்கறிஞரானார். பிப்ரவரி 9, 2008 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மார்ச் 31, 2009 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், ஜனவரி 3, 2012 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 22, 2022 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜா_(நீதிபதி)&oldid=3995643" இலிருந்து மீள்விக்கப்பட்டது