டுவைன் சுமித்

மேற்கிந்திய துடுப்பாட்டக்காரர்

டுவைன் ரோமல் சுமித் (Dwayne Romel Smith (பிறப்பு: 12 ஏப்ரல், 1983) முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 10 தேர்வுத் துடுப்பாட்டப் , 105 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், 33 பன்னாட்டு இருபது20 மற்றும் 183 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வலது கைமட்டையாளரான இவர் சகலத் துறையர் ஆவார். அடித்து விளையாடும் வீரராக அறியப்படும் இவர் சிறந்த களத் தடுப்பு வீரரும் ஆவார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொகு

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பருவ இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. டுவைன் பிராவா என்பவரை இந்த நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. பின் அவருக்குப் பதிலாக இவரைத் தேர்வு செய்தது. அந்தத் தொடரில் இவர் நான்கு போட்டிகளில் விளையாடினார். அதில் ஐந்து இலக்கௌகளைக் கைப்பற்றினார்.[1] அதன் பந்து வீச்சு சராசரி 16.60 ஆகும்.[2]

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பருவ இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி US$100,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[3] இந்தத் தொடரில் பந்துவீச்சினை விட மட்டையாட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டார்.அந்தத் தொடரில் 215 ஓட்டங்களை 26.87 எனும்சராசரியோடு பெற்றார்.மேலும் ஓர் இலக்கினை மட்டுமே கைப்பற்றினார்.[4] [5] அந்தத் தொடரினை டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது. ஆனால் இவர் நாக் அவுட் சுற்ரோடு வெளியேறினார். அடுத்த ஆண்டின் தொடரிலும் இவரை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் மூன்ரு போடிகளில் மட்டுமே இவர் விளையாடினார். [6] 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பருவ இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.மிட்சல் ஜான்சன் எனும் வீரருக்குப் பதிலாக இவர் தேர்வானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இவர் ஆறு , இரு நான்குஓட்டங்களை எடுத்து அனியினை வெற்றி பெறச் செய்தார்.[7] 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவரை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம் ரூபாய் 42,500,000 மதிப்பில் [8] ஏலத்தில் எடுத்தது.

சர்வதேச போட்டிகள் தொகு

2002 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று தேர்வுப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் தேர்வுப் போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் இருபது ஓட்டங்களை மட்டும் எடுத்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 105 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் அறிமுகப்போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த பதினொராவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[9] அதற்கு அடுடத்து விளையாடிய ஒன்பது போட்டிகளில் இவர் ஐம்பதுக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தார். அதே அணிக்கு எதிராக இவர் ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் அவரின் மட்டையாட்ட சராசரி 12.33 ஆக இருந்தது.[10]

சான்றுகள் தொகு

  1. "Dwayne Smith added to Mumbai squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  2. "Bowling in Indian Premier League 2007/08 (Ordered by Average)". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  3. "IPL auction 2009 / List of players sold". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  4. "Batting and Fielding in Indian Premier League 2009 (Ordered by Average)". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  5. "Bowling in Indian Premier League 2009 (Ordered by Average)". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  6. "Batting and Fielding in Indian Premier League 2009/10 (Ordered by Average)". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  7. "Mumbai Indians win a last-ball thriller". CricketNext. Archived from the original on 8 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.
  8. http://www.cricketcountry.com/news/ipl-7-auction-dwayne-smith-bought-by-chennai-super-kings-for-rs-4-5-crores-96454
  9. "Smith debut century denies South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
  10. "ODI Batting and Fielding for West Indies / West Indies in South Africa and Zimbabwe 2003/04". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவைன்_சுமித்&oldid=3556705" இலிருந்து மீள்விக்கப்பட்டது