டெஃடுசு ரோஃப்பின்சசு

டெஃடுசு ரோஃப்பின்சசு

டெஃடுசு ரோஃப்பின்சசு (Textus Roffensis) என்பது 12 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இங்கிலாந்தின் மிகப்பழமையான சட்ட நூல் ஆகும். இது இங்கிலாந்தின் மாக்னா கார்ட்டாவை விட நூறு வருடம் பழமையான நூல்.[1]

டெஃடுசு ரோஃப்பின்சசில், தாள்கள் 1 முதல் 118 வரை (ஒரு தாள் = இரு பக்கங்கள்), ஐந்தல்பர்ட் முதல் முதலாம் ஃகென்றி வரையான காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆங்கிலோ-சாக்சன் சட்டங்களைப் பற்றி விவரிக்கிறது. உரோச்சட்டர் தேவாலயத்தின் துறவியர் மடத்தின் சாசனங்களைப் பற்றி 119 முதல் 235 வரை உள்ள தாள்கள் விவரிக்கின்றன.[2]

பதினெட்டாம் நூற்றாண்டில் டெஃடுசு ரோஃப்பின்சசு தேம்சு ஆற்றில் விழுந்ததால், இதன் பல பக்கங்களில் எழுத்துக்கள் நீரினால் சேதமடைந்துவிட்டன. அதிகமாகச் சேதமடைந்தத் தாள்கள் 103 முதல் 116 வரை ஆகும்.

டெஃடுசு ரோஃப்பின்சசு நூலில் உரோச்சட்டர் பகுதிகளில் 1100-களில் வாழ்ந்த 13 துறவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் பெயரின் அடிப்படையில் ஆறு பேர் இங்கிலாந்து நாட்டவர் என்றும், ஏழு பேர் அயல்நாட்டவர் என்றும் அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Flood, Alison (2014-11-05). "‘Strike off a thumb, 20 shillings’: digitised Textus Roffensis is a window on early British law". Guardian. பார்த்த நாள் 2015-08-11.
  2. Oliver, Lisi (2002). The beginnings of English law. Toronto, Ont: University of Toronto Press. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8020-3535-6. 
  3. Williams, Ann (1995). The English and the Norman conquest. Woodbridge, Suffolk, UK Rochester, NY, USA: Boydell Press. பக். 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85115-708-5. 

வெளியிணைப்புகள்தொகு

  1. டெஃடுசு ரோஃப்பின்சசு நிறநகல்
  2. டெஃடுசு ரோஃப்பின்சசு - ஒரு மறைக்கப்பட்ட புதையல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஃடுசு_ரோஃப்பின்சசு&oldid=1898093" இருந்து மீள்விக்கப்பட்டது