டெசு-மார்டின் ஆக்சிசனேற்றம்
டெசு-மார்டின் ஆக்சிசனேற்றம் ( Dess–Martin oxidation) என்பது டெசு-மார்டின் பீரியாடினேன் என்ற வினைப்பொருளைப் பயன்படுத்தி முதனிலை ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாகவும், இரண்டாம் நிலை ஆல்ககால்களை கீட்டோன்களாகவும் மாற்றுகின்ற கரிம வேதியியல் வினையாகும். அமெரிக்க வேதியியலர்களான டேனியல் பெஞ்சமின் டெசுவும் யேம்சு குல்லன் மார்டினும் கண்டுபிடித்த காரணத்தால் இவ்வினை டெசு-மார்டின் ஆக்சிசனேற்ற வினை என்ற பெயரைப் பெற்றது [1]. இவர்கள் 1983 ஆம் ஆண்டில் பீரியோடினேன் வினைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.
டெசு-மார்டின் ஆக்சிசனேற்றம் | |
---|---|
பெயர் மூலம் | டேனியல் பெஞ்சமின் டெசு யேம்சு குல்லன் மார்டின் |
வினையின் வகை | கரிம ஒடுக்க-ஏற்ற வினை |
தண்ணீரை உபயோகித்து டெசு-மார்டின் ஆக்சிசனேற்ற வினையை முடுக்கிவிடும் முறையை மேயரும் சிகிரீபரும் செய்து காட்டினர் [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Dess, Daniel B.; Martin, James C. (1983). "Readily accessible 12-I-5 oxidant for the conversion of primary and secondary alcohols to aldehydes and ketones". J. Org. Chem. 48 (22): 4155–4156. doi:10.1021/jo00170a070.
- ↑ Meyer, Stephanie D.; Schreiber, Stuart L. (1994). "Acceleration of the Dess-Martin Oxidation by Water". J. Org. Chem. 59 (24): 7549–7552. doi:10.1021/jo00103a067.