டெட்ராமெத்தில்பென்சீன்
வேதிச் சேர்மங்களின் ஒரு குழு
டெட்ராமெத்தில்பென்சீன்கள் (Tetramethylbenzene) என்பவை C10H14 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். இச்சேர்மங்கள் அரோமாட்டிக் நீரகக்கரிமங்களின் ஒரு குழுவை உருவாக்குகின்றன. ஒரு பென்சீன் வளையமும் நான்கு மெத்தில் குழுக்களும் (–CH3) இவற்றின் கட்டமைப்பில் பதிலீடுகளாக இடம்பெற்றுள்ளன.[1] மெத்தில் குழுக்களின் அமைவிடத்தைப் பொறுத்து மூன்று கட்டமைப்பு சமபகுதியங்கள் உருவாகின்றன. இவை C4-பென்சீன்களின் குழுவை சேர்ந்தவையாகும். நன்கு அறியப்பட்ட ஒரு சமபகுதியம் தியூரீன் என்ற சமபகுதியமாகும்.[2]
டெட்ராமெத்தில்பென்சீன்கள் பொதுப் பெயர் பிரீனிட்டீன் ஐசோதியூரின் தியூரின் வேதிப் பெயர் 1,2,3,4-டெட்ராமெத்தில்பென்சீன் 1,2,3,5-டெட்ராதில்பென்சீன் 1,2,4,5-டெட்ராமெத்தில்பென்சீன் கட்டமைப்பு வாய்பாடு சி ஏ எசு பதிவு எண் 488-23-3 527-53-7 95-93-2
மேற்கோள்கள்
தொகு- ↑ "tetramethylbenzene". Chemspider. chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.
- ↑ "1,2,4,5-Tetramethylbenzene". sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2016.