டெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட்
டெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட் (Death of a Cyclist (எசுப்பானியம்: Muerte de un ciclista) என்பது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு எசுபானியத் திரைப்படமாகும். இப்படத்தை உவான் அந்தோனியோ பர்தெம் இயக்கினார். மேலும் இதில் இத்தாலிய நடிகை லூசியா போஸே நடித்தார், எல்ஸா ஃபார்கெகாஸ் ஸ்பானிஷ் மொழியில் டப் செய்தார். இப்படம் 1955 கான் திரைப்பட விழாவில் திரைப்பட விமர்சகர்களின் சர்வதேசக் கூட்டமைப்புப் பரிசை (FIPRESCI) வென்றது.[1]
டெத் ஆஃப் எ சைக்கிளிஸ்ட் | |
---|---|
இயக்கம் | உவான் அந்தோனியோ பர்தெம் |
தயாரிப்பு | மானுவல் கோயியன்ஸ் |
திரைக்கதை | ஜுவான் அன்டோனியோ பார்மேம் |
இசை | இசிரோ பி. மைச்டிகாய் |
நடிப்பு | லூசியா போஸ் அல்பர்டோ குளோசஸ் |
ஒளிப்பதிவு | ஆல்ஃபிரடோ ஃபிரெயில் |
படத்தொகுப்பு | மார்கரிட்டா டி ஓச்சோ |
கலையகம் | சூயியா பிலிம்ஸ் |
விநியோகம் | ஜானஸ் பிலிம்ஸ் |
வெளியீடு | மே 9, 1955(Cannes Film Festival) செப்டம்பர் 9, 1955 (Spain) |
ஓட்டம் | 88 நிமிடங்கள் |
நாடு | எசுப்பானியா |
மொழி | எசுப்பானியம் |
கதை
தொகுபடத்தின் தொடக்கத்தில், ஒரு இணையர் மகிழுந்தில் செல்கிறனர். ஆளற்ற சாலையில் விரைந்துசெல்லும் அந்த கார், மிதிவண்டியில் சென்ற மனிதன் ஒருவன்மீது மோதிவிடுகிறது. இளைஞன் இறங்கிச் சென்று பார்க்கிறான் அடிபட்ட மனிதனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. உடனிருக்கும் பெண் அங்கிருந்து சென்றுவிடலாம் என இளைஞனைத் தூண்டுகிறாள். இருவரும் சென்றுவிடுகின்றார்கள். அடிபட்ட மனிதன் இறந்துவிடுகிறான். மறுநாள் நாளிதழில் இது செய்தியாகிறது. அவர்கள் இருவரும் காரில் சென்றதைப் பார்த்ததாகக் கலை விமரிசகன் ஒருவன் பார்த்துவிடுகிறான் அவன் அவர்களை, குறிப்பாக அந்தப் பெண்ணை மிரட்டுகிறான். மகிழுந்தில் வந்த இருவரும் கணவனும் மனைவியும் அல்ல. இருவரும் காதலர்கள். மகிழுந்தில் சென்ற ஆண் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அந்தப் பெண்ணும் சமூக அந்தஸ்து பெற்ற ஒருவருடைய மனைவி. அந்தப் பெண்ணால் ஒரே நேரத்தில் ஒருவருடைய மனைவியாகவும் மற்றொருவருடைய காதலியாகவும் இருக்கிறாள். இரு உறவுகளின் அனுகூலங்களையும் அனுபவிக்க ஆசைப்படுகிறாள். காதல் உறவைத் தைரியமாக வெளியில் சொல்ல முடியவில்லை; மிகவும் ரகசியமாகப் பேணுகிறாள். அதனால்தான் அவள் மிரட்டப்படுகிறாள். அவர்களால் கொலையை மறைக்க முடிந்ததே ஒழிய அதன் குற்ற உணர்விலிருந்து தப்பித்துக்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர். விபத்துச் சம்பவம் நடந்ததற்கு மறு நாள் கல்லூரியில் மனக் குழப்பத்துடன் இருக்கும் பேராசிரியர் தன் மாணவி தேர்வில் தோற்றுப்போகக் காரணமாகிறார். ஒரு குற்றச் செயலை மறைத்ததால் தொடர்ந்துவரும் பல சம்பவங்கள் போர், காதல், காமம், திருமணம், சமூக அந்தஸ்து, மத நம்பிக்கை, மனசாட்சி போன்றவை பற்றிய தார்மிகக் கேள்விகளை எழுப்பும் வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
விருதுகள்
தொகுவெற்றி
- கான் திரைப்பட விழா: சர்வதேசக் கூட்டமைப்புப் பரிசு (FIPRESCI Prize), Juan Antonio Bardem; 1955.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Death of a Cyclist
- Death of a Cyclist essay by Marsha Kinder at The Criterion Collection
- யூடியூபில் Death of a Cyclist opening film clip by Film-O-Tech (Spain)
- Death of a Cyclist film review by Felicia Feaster at Turner Classic Movies
- யூடியூபில் Death of a Cyclist film clip