டென்னிசன் பலியாட்டம்

சதுரங்கத் திறப்பு

டென்னிசன் பலியாட்டம் (Tennison Gambit) என்பது பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கும் ஒரு சதுரங்கத் திறப்பு ஆகும். இத்திறப்பாட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவர் ஒரு சிப்பாயை பலியாகக் கொடுக்கிறார்[1][2][3][4] சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக் களஞ்சியத்தில் ஏ06 என்ற குறியீட்டால் இத்திறப்பு அடையாளம் காட்டப்படுகிறது. ரீட்டி திறப்பு வழியாகவும் இத்திறப்பு உருவாகலாம். [5]

டென்னிசன் பலியாட்டம்
Tennison Gambit
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
d5 black pawn
e4 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.Nf3 d5 2.e4
அல்லது
1.e4 d5 2.Nf3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் ஏ06
பெயரிடப்பட்டது ஓட்டோ மேன்டிரப் டென்னிசன்
மூலம் இராசா சிப்பாய் ஆட்டம்
ஏனைய சொற்கள் அபோனைல் பலியாட்டம்,
கருப்பு யானை பலியாட்டம்
லெம்பர்க்கு பலியாட்டம்
இலிவிவ் பலியாட்டம்
போலந்து பலியாட்டம்
சூக்கர்டோர்ட் பலியாட்டம்
Chessgames.com opening explorer
1. Nf3 d5
2. e4

அல்லது இசுகாண்டினேவியன் தடுப்பு :1. e4 d5
2. Nf3


.

வரலாறு தொகு

ஓட்டோ மேன்டுரப் டென்னிசன் என்ற தொழில்முறை சாராத சதுரங்க விளையாட்டு வீர்ர் (1834–1909) இத்திறப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார்[6][7]. இவர் டென்மார்க்கில் பிறந்தவர் ஆவார். செருமனியில் படித்து பின்னர் 1854 இல் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். இங்குள்ள நியூ ஒர்லீன்சின் சதுரங்க கழகங்களில் விளையாடினார். பல சிறந்த சதுரங்க வீர்ர்கள் 20 ஆம் நூற்ராண்டின் முதல் பாதியில் இவருடை திறப்பு உத்தியை பயன்படுத்தி விளையாடினர்.

2...dxe4 3.Ng5 நகர்வுகளுக்குப் பின்னர் தொகு

3... e5! (வெள்ளைக்கு அனுகூலம் கிடைத்தது எர்மென்கோவ்–போன்செவ் ஆட்டம்,பல்கேரியா 1970, பின்னர் 3...Nf6?! 4.Bc4 e6 5.Nc3 a6 6.Ngxe4 Nxe4 7.Nxe4 b5 8.Be2 Bb7 9.Bf3) 4. Nxe4 f5! கருப்புக்கு அனுகூலம்.[8]

குறிப்பிடத்தக்க ஆட்டம் தொகு

ஓட்டொ எம். டென்னிசன் X பெயர் தெரியாத ஆட்டக்காரர், நியூ ஓரிலீன்சு 1891
1. Nf3 d5 2. e4 dxe4 3. Ng5 f5 4. Bc4 Nh6 5. Nxh7 Rxh7 6. Qh5+ Kd7 7. Qg6 Rh8 8. Be6+ Kc6 9. Bxc8+ Qd6 10. Qe8+ Kb6 11. Qa4 (if 11...Qc6 என்றால் 12.Qb3+ Ka6 13.Nc3 any 14.Bxb7+; 11...e6 12.a3, இத்யாதி —டென்னிசன்) 1–0

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசன்_பலியாட்டம்&oldid=3871431" இலிருந்து மீள்விக்கப்பட்டது