டெல்டா 1000 தொடர் (Delta 1000 series) என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1972 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 1000 ஏவூர்தியும் ஒன்றாகும். நான்கு இலக்க எண் குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வகையின் மாறுபட்ட வகைகள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன.

டெல்டா 1000 தொடர்
Delta 1000 series
டெல்டா 1910 ஏவுதல்
டெல்டா 1910 ஏவுதல்
தரவுகள்
இயக்கம் எரிந்தழியும் ஏவுகல அமைப்பு
அமைப்பு {{{manufacturer}}}
நாடு  ஐக்கிய அமெரிக்கா


ஏவு வரலாறு
நிலை நிறுத்தப்பட்டது
ஏவல் பகுதி கேனவெரால் எல்.சி-17பி
வேண்டன்பெர்க் வி.க.ஏ.வ-2டபிள்யூ
மொத்த ஏவல்கள் 8
வெற்றிகள் 8
முதல் பயணம் 23 செப்டம்பர் 1972
கடைசிப் பயணம் 21 சூன் 1975

தோர் ஏவுகணையின் நீட்சிவடிவமான நீள் தொட்டி தோர் அமைப்பே, டெல்டா தொடரின் முதற்கட்டம் ஆகும். மாற்றுருக்கள் அனைத்திலும் இம்முதற் கட்ட அமைப்புடன் ஆற்றல் நிரப்ப உயர்த்திகள் இணைக்கப்படுகின்றன. மேலேற்றும் உந்துகைச் சக்தியை அதிகரிக்கும் விதமாக திண்ம ஏவூர்தி உந்துகலங்களான காசுடர்-2 ஆற்றல் நிரப்பிகள் 4, 6 அல்லது 9 என்ற எண்ணிக்கைகளில் இணைக்கப்பட்டன.

டெல்டா 1000 நேர் எட்டு என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. டெல்டா 1000 ஏவூர்தியின் இரண்டாம் கட்ட மாற்றுருக்கள் முதற்கட்ட ஏவூர்திகள் போலவே எட்டு அடி நீள விட்டத்தைக் கொண்டுள்ளதால் "நேர் எட்டு" என்ற புனைபெயர் வந்தது. முன்னதாக உருவாக்கப்பட்ட டெல்டா ஏவூர்தி வகை இரண்டாவது நிலைகளில் விட்டம் சிறிய அளவில் காணப்பட்டது. மாற்றுருக்களின் தன்மைகளுக்கு ஏற்ப இரண்டு வேறுபட்ட இரண்டாம் நிலை ஏவூர்திகள் பறக்கவிடப்பட்டன.

  • டெல்டா எப் இரண்டாம் நிலை: இது ஏரோயெட் ஏயெ10-118எப் பொறி பொருத்தப்பட்ட ஏவூர்தி வகையாகும். எக்சுபுளோரர் 47,50 மற்றும் 51 ஆகிய விண்கலங்கள் இப்பொறியைப் பயன்படுத்தி ஏவப்பட்டன. ஆனிக் ஏ1 செயற்கைக் கோள் ஏவுதலுக்கே ஏரோயெட் பொறிகள் தயாரிக்கப்பட்டன. (தவறுதலாக டெல்டா 1000 தொடரில் xx1x என்று குறிக்கப்பட்டுள்ளது)
  • டெல்டா – பி இரண்டாம் நிலை: இது புதிய டிஆர்டபிள்யூ டிஆர்-201 பொறி பொருத்தப்பட்ட ஏவூர்தி வகையாகும். 1973 மற்றும் 1975 ஆ ஆண்டு காலத்தில்[1] இப்பொறியைப் பயன்படுத்தி இரண்டு ஏவுதல்கள் நிகழ்ந்தன.

பூமியின் தாழ்வட்டப் பாதைக்கு மேலே ஏவுதலுக்கான சில பறத்தல்களுக்கு மூன்றாம் நிலை ஏவூர்திகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக தையோகால்-37டி அல்லது சிடார்-37இ வகைகள் உதவின. டெல்டா 1913 என்ற டெல்டா 1000 தொடர் ஏவூர்தியைப் பயன்படுத்தி 1973 ஆம் ஆண்டு சூன் 10 இல் எக்சுபுளோரர் 49 என்ற விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது.

கலிபோர்னியாவிலுள்ள வேண்டன்பெர்க் வான்படைத் தளத்தில் இருக்கும் விண்கல ஏவுவளாகம் 2டபிள்யூ வில் இருந்தும், கேப் கேனவெராலில் இருக்கும் விண்கல ஏவுவளாகம் 17பி இல் இருந்தும் டெல்டா 1000 ஏவூர்திகள் ஏவப்பட்டன. டெல்டா 1000 தொடரில் ஏவப்பட்ட எட்டு திட்டங்களும் வெற்றியில் முடிந்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. Kyle, Ed (9 April 2010). "Delta 1000 series". Space Launch Report.
  • Wade, Mark. "Delta". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 2009-02-15.
  • Krebs, Gunter. "Thor family". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 2009-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_1000&oldid=3448423" இலிருந்து மீள்விக்கப்பட்டது