டெவில் இன் தி மில்க்

டெவில் இன் தி மில்க் (Devil in the Milk) என்ற நூலானது, முனைவர் கீத் உட்போர்டு (Dr. Keith Woodford) என்வரால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இவர் நியூசிலாந்து நாட்டிலுள்ள லிங்கன் பல்கலைக் கழகத்தின் பண்ணை மேலாண்மையும், வேளாண்மை தொழிலும் (Farm Management and Agribusiness) என்ற துறையின் பேராசிரியர் ஆவார். இந்த நூலைக் குறித்த, நடுநிலையான மதிப்பாய்வுகளை பல அமைப்புகள் செய்துள்ளன. அவற்றில் ஒன்று, மாற்றுமருத்துவம் மற்றும் ஒருங்கிணைவு மருத்துவ நிறுவனம் (The Foundation for Alternative and Integrative Medicine -FAIM) ஆகும்.[1] அதன்படி, உடல் நலம் குறித்த ஏற்படைய ஆய்வை வெளியிட்டு இருக்கிறார் என தெரிய வருகிறது. அது யாதெனில், நாம் அன்றாட வாழ்வில் உணவாக எடுத்துக் கொள்ளும் பால் குறித்தவைகள் ஆகும். பால் உற்பத்தியாளர்களிடம், இவரின் ஆய்வுக் குறித்த மாற்று கருத்துகள் நிலவுகின்றன.

டெவில் இன் தி மில்க்

பாலின் உட்கூறு தொகு

பாலூட்டிகளின் பாலில், பலவித உட்கூறுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று 'கேசின்' (Casein) ஆகும். அப்புரதம் இரு நிலைகளில் உள்ளது. A1 beta-casein என்பதும், A2 beta-casein என்பதும் ஆகும். A1 beta-casein என்ற புரதப் பொருளுக்கும், இதநோய்கள், நீரிழிவு (Diabetes mellitus type 1), மதியிறுக்கம், மனப்பித்து ஆகிய நோய்களுக்கும், இப்புரதப் பொருளுக்கும் உள்ள தொடர்புகள் உள்ளன என இந்நூல் ஆய்கிறது.

நூற்சுருக்கம் தொகு

நூலாசிரியர், 100க்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டு, தனது ஆய்வு நோக்கினைச் விவரித்து இருக்கிறார். சில ஐரோப்பியா நாடுகளில், மரபின மாறுபாட்டால் (genetic mutation), அங்குள்ள சில மாடுகளின் பால் தரம், ஏ2(A2) என்பதில் இருந்து ஏ1(A1) என்ற நிலைக்கு மாறியுள்ளதென ஆய்வு முடிவாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், பெரும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள், பால் வியாபாரத்தில், மக்களின் மனநிலையைப் பயன்படுத்துவது குறித்தும், பலவிதமான நோய் காரணிகள் குறித்த ஆய்வுகளை ஒன்றிணைத்து, மக்களின் நலன் குறித்து ஆய்வுகளின் ஒருங்கிணைப்பும் எடுத்து இயம்பப் படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காணவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெவில்_இன்_தி_மில்க்&oldid=2748183" இலிருந்து மீள்விக்கப்பட்டது