டேனியல் யங்கேலொவிச்
டேனியல் யங்கேலொவிச் ( Daniel Yankelovich 29 திசம்பர் 1924 - 22 செப்டம்பர் 2017) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் கருத்துக் கணிப்பாளர், நூலாசிரியர் மற்றும் மக்கள் கருத்து ஆய்வாளர் ஆவார். தேர்தல்களின் மதிப்பீடுகளை ஆவணப்படுத்துவதிலும் தரமான புள்ளி விவரங்கள் சேகரிப்பதிலும் தொழில் நேர்மையைக் கடைபிடிப்பதிலும் சிறந்தவர் என்ற நல்ல பெயரைப் பெற்றவர்.[1]
பிறப்பும் படிப்பும்
தொகுஅமெரிக்காவில் பாஸ்டனில் பிறந்த டேனியல் யங்கேலொவிச் ஆர்வர்டில் கல்வி பயில பதிவு செய்தார். பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது படையில் சேர்ந்து பணியாற்றினார். மீண்டும் ஆர்வர்டுக்குத் திரும்பினார். 1946 இல் இளங்கலைப் பட்டமும் 1950 இல் முதுகலைப் பட்டமும் பெற்றார். பாரிசுக்குச் சென்று படித்தார். ஆனால் ஆய்வுப் பட்டம் பெறாமல் அமெரிக்கா திரும்பினார்.
பணிகள்
தொகு1958 இல் இவர் பெயரில் சந்தை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். மேலும் நியூயார்க் டைம்ஸ்/யங்கேலொவிச் வாக்கெடுப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். மக்கள் கருத்துக்களைத் திரட்டவும் கல்வியைப் பரப்பவும் சைரஸ் வான்ஸ் என்பவருடன் இணைந்து கட்சி சார்பில்லாமல் பப்ளிக் அஜெண்டாவைத் தோற்றுவித்தார்.[2] 1970 ஆம் ஆண்டில் இவருடைய குழுமம், சந்தை ஆராய்ச்சிக் குழுமங்களில் மிகப் பெரிய ஒன்றாக வளர்ந்தது. தி நியூ யார்க்கு டைம்ஸ், பார்ச்சூன் இதழ், ஏ. டி. அன்ட் டி, ஜெனெரல் எலக்ட்ரிக், ஜெனரல் மோட்டார்ஸ், ஐ.. பி எம். ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் போன்றவை இவரது வாடிக்கையாளர்களாக ஆகினார்கள். 1995 இல் இவருக்கு கெலன் டைனர்மன் விருது கிடைத்தது.[3] 12 நூல்களும் பல கட்டுரைகளும் எழுதினார்.