டேவிசின் நிலத்தோற்றத் தத்துவம்
டேவிசின் நிலத்தோற்றக் கோட்பாடு என்பது புவியில் ஓரிட நிலத்தின் புறவடிவம் அவ்விடத்தின் பாறை அமைப்பு, அரித்தல் செயல்முறை, வளர்ச்சி நிலை ஆகியவற்றின் கூட்டுநிகழ்வால் தோன்றுகிறது என்று அமெரிக்காவின் புவிப்புறவியல் அறிஞர் டேவிசு வெளியிட்ட நிலத்தோற்றம் பற்றிய கோட்பாடு ஆகும்.
பாறை அமைப்பும், நிலப்புற வடிவத் தோற்றமும்
தொகுபாறையின் இயல்புகள் அடிப்படைக் கட்டமைப்பு, கடினத்தன்மை, உறுதித் தன்மை, கரையும் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும். பாறைகள் கற்குழம்புப் பாறைகளாகவும், படிவடுக்குப் பாறைகளாகவும் அல்லது இரண்டுங் கலந்த பாறைகளாகவும் காணப்படுகின்றன. பாறைகளின் கடினத்தன்மை, உறுதித் தன்மை, நீர்புகுதல், கரைதல் போன்ற அனைத்துக் கூறுபாடுகளும் நிலப்புற வடிவத் தோற்றத்தைக் கட்டுபடுத்துகின்றன. உறுதியான பாறைகள் பழமையாக இருந்தால் எளிதில் அரிக்கப்படுகின்றன. புதிதாகத் தோன்றிய பாறைகளாலும் புவியக நிகழ்வால் மேலெழும்பும் பாறைகளாலும் கரடுமுரடான நிலப்புற வடிவத் தோற்றம் உண்டாகிறது. இதில் மென்பாறைகள் எளிதில் அழிகின்றன.
அரித்தல் செயல்முறை
தொகுஅரித்தல் செயல்முறை என்பது புவியின் மேல் தளத்தை அரித்து நிலப் புர வடிவத் தோற்றங்களை உருவாக்குகிற வானிலைச் சிதைவு, ஓடும் நீர், காற்று, பனிக்கட்டி, புவியீர்ப்புவிசை போன்ற புறச்செயல்முறைகளைக் குறிக்கும். அரித்தலின் செயற்கூறுகளான வானிலைச் சிதைவும் ஓடும் நீரின் அரிப்பும் இயல்பான செயல்முறைகள் எனப்படும். மித வெப்ப மண்டலத்திலும், மழைநிலப் பகுதிகளிலும் இவ்விரண்டு செயல்முறைகளும் மிக முதன்மையானவையாகும்.
வளர்ச்சி நிலை
தொகுகடலுக்குள்லிருந்து புதியதாக ஒரு நிலம் மேலெழுந்தவுடன் அது வானிலைச் சிதைவுக்கு இலக்காகிறது. இதன் பிறகு இதில் ஆறுகள் தோன்றுவதால் நிலம் அரிக்கப்பட்டு தாழ்கிறது.
சில நிலப் புற வடிவத் தோற்றங்கள்
தொகு- வெப்பமும், ஈரமும் அதிகமுள்ள பகுதிகளில் கடினத் தீப்பாறைகள் இருந்தால் அவை அரிக்கப்பட்டு உயர்ந்த குன்றுகளும் எரிமலை குமிழ்வாய்களும் தோன்றுகின்றன.
- திண்குறுணைப் (கருங்கற்) பாறைகள் வானிலைச் சிதைவடையும் போது பருஞ் செவ்வக வடிவப் பாறைகள் ஏற்படுகின்றன.
- பெருந்துகள்கள் கொண்ட மில்ஸ்டோன்கிரிட் அரிக்கப்படும் பொழுது மேசை நிலம், படிவரிசை நில வடிவம் ஆகியன தோன்றுகின்றன.
- வலிமைமிக்க கடல் அலைகளால் கடினத் தன்மை கொண்ட பாறைகள் அரிக்கப்பட்டு சமநிலமாக மாறுகின்றன.
- நீர்புகும் விரிசல்கள் கொண்ட சுண்ணாம்புப் பாறை அரிக்கப்பட்டு சரிவு மிகுந்த மலையிடுக்குகள் தோன்றுகின்றன.
- மென்மையானதும், புரைத்தன்மை அதிகம் உள்ளதுமான பாறை அரிக்கப்படும் போது மேடுபள்ளமான நிலப்புற வடிவம் தோன்றுகிறது.
- கடினத்தன்மையும், மென்பாறையும் மாறி மாறி அமைந்த படிவுப்பாறைகளில் குத்துச் சரிவு உடைய நிலப்புற வடிவம் உண்டாகின்றது.
- புவியில் கண்டறியப்படும் பல்வேறு வடிகால் அமைப்புகள் கும்மட்டம், பிளவு, மடிப்பு ஆகிய அமைப்புகள் கொண்ட பாறைகளில் வெவ்வேறு நிலத் தோற்றங்கள் ஏற்படுகின்றன.
- அரித்தல் செயல்முறையினாலும் நிலப்புற வடிவங்கள் புதியதாக உண்டாகின்றன. ஓடும் நீரில் அரிப்பினால் V வடிவ பள்ளத்தாக்குகளும் பனியாற்றின் அரிப்பினால் U வடிவ பள்ளத்தாக்குகளும் ஏற்படுகின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Smart, W.M., `The Origin of the Earth, `Published by Penguin Books.
- ↑ என். பதமநாபன்., புவிப்புறவியல்