டேவிடு வான்டீசு
டேவிடு வாண்டீசு போர்ட்சுமவுத் பல்கலைக்கழகத்தில் அண்டவியல், ஈர்ப்பு நிறுவனத்தில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார்.
இவர் முனைவர் சாலனர் இலக்கணப் பள்ளி , அமர்சாம், கேம்பிரிட்ஜ் கோன்வில், கையஸ் கல்லூரியில் கல்வி பயின்றார் , அங்கு அவர் இயற்கை அறிவியல் (இயற்பியலும் கணிதமும்) படித்தார். 1994 ஆம் ஆண்டில் சசெக்சு பல்கலைக்கழகத்தில் வானியல் மையத்தில் ஜான் டி. பாரோ மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொடக்கநிலைப் புடவி இயற்பியல், அண்ட கட்டமைப்பின் தோற்றம் குறித்தும் அண்டவியல் குறித்தும்ராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாண்டீசு வெளியிட்டுள்ளார். வாண்டீசு ஆராய்ச்சியில் காலவெளி தொடர்மத்தின் அடர்த்தியில்ய்ம் அளவீட்டிலும் உள்ள முற்பாழின் அலைவுகளை பற்றிய ஆய்வு அடங்கும். 2001 ஆம் ஆண்டில் டேவிட் எச். இலைத்துடன் இணைந்து அண்ட கட்டமைப்பின் தோற்றத்திற்கான வளைவுப் படிமத்தை இவர் முன்மொழிந்தார்.