டேவிடைட்டு
ஆக்சைடு கனிமம்
டேவிடைட்டு (Davidite) என்பது (La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் ஆகும். இலந்தனம் மற்றும் சீரியம் தனிமங்கள் இக்கனிமத் தொடரின் இறுதி உறுப்புகளாகும். இரண்டு வடிவங்களில் தாவிடைட்டு உருவாகிறது.
டேவிடைட்டு Davidite-(La) | |
---|---|
டேவிடைட்டு-(La) கசகிசுத்தானில் கிடைத்தது | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | (La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக அமைப்பு | முக்கோணம்44 |
முறிவு | சங்குருவம் முதல் சமமற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 6 [1] |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது, மெல்லிய துண்டுகளில் ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 4.33 to 4.48 |
Alters to | படிக உருவமற்று |
மேற்கோள்கள் | [2][3][4][5] |
•டேவிடைட்டு-(La) (La,Ce,Ca)(Y,U)(Ti,Fe3+)20O38 1906 ஆம் ஆண்டு தெற்கு ஆத்திரேலியாவின் ரேடியம் இல் சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. ஆத்திரேலிய நிலவியலாளர் தன்னட் வில்லியம் எட்கிவொர்த் டேவிட்டு நினைவாக டக்ளசு மாவ்சன் டேவிடைட்டு என்று பெயரிட்டார்.
•டேவிடைட்டு -(Ce) (Ce,La)(Y,U)(Ti,Fe3+)20O38 1960 ஆம் ஆண்டு முதன்முதலாக நார்வே நாட்டின் ஐவ்லேண்டு நகரத்தில் வெமோர்க் நீர்மின் திட்ட்த்திற்கு அருகில் கண்டறியப்பட்டது.