டேவிட் கேப்பர்

டேவிட் அவுசுடன் கேப்பர் (19 நவம்பர் 1932 – 23 மார்ச்சு 2024) வடக்கு அயர்லாந்து பத்திரிகையாளரும் நிருபருமாவார்.[1]

டேவிட் கேப்பர்
David Capper
பிறப்புடேவிட் அவுசுடன் கேப்பர்
(1932-11-19)19 நவம்பர் 1932
பெல்பாஸ்ட், வட அயர்லாந்து
இறப்பு23 மார்ச்சு 2024(2024-03-23) (அகவை 91)
பாங்கூர், கவுன்டி டவுன், வட அயர்லாந்து
பணிபத்திரிக்கையாளர், நிருபர்
செயற்பாட்டுக்
காலம்
1950களிலும் 2001இற்கு முன்னரும்
பணியகம்பிபிசி வட அயர்லாந்து
(1961–1987)
பிள்ளைகள்3

ஆரம்பகால வாழ்க்கையும் தொழிலும்

தொகு

1932 நவம்பர் 19 அன்று பெல்பாஸ்ட்டில் பிறந்த கேப்பர், நியூ டவுனார்ட்சு குரோனிக்கலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வான்கூவரில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், கேப்பர் வடக்கு அயர்லாந்திற்குத் திரும்பி, பெல்ஃபாஸ்ட் டெலிகிராப்பிலும் பிபிசியிலும் சேருவதற்கு முன்பு உள்ளூர் செய்தித்தாளில் ஆசிரியராகப் பணியாற்றினார். கேப்பர் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 1987 இல் பிபிசியை விட்டு வெளியேறினார். டோனகதீவில் குடியேறுவதற்கு முன்பு, வெளிநாடுகளில் வானொலி நிலையங்களை உருவாக்க ஆலோசனை வழங்கும் ஊடகங்களில் இவர் தொடர்ந்து பணியாற்றினார்.[2] 2001ஆம் ஆண்டுக்கு முன்னரே கேப்பர் ஓய்வு பெற்றார்.[3] இவர் கடைசியாக பிபிசியில் சூலை 2019 இல் வால்டர் லவ் உடன் ஒரு வலையொலி விருந்தினராகத் தோன்றினார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கையும், இறப்பும்

தொகு

கேப்பருக்கு மூன்று குழந்தைகளும் ஒன்பது பேரக்குழந்தைகளும் இருந்தனர்.[5] கேப்பர் 2024 மார்ச்சு 23 அன்று பாங்கோர், கவுண்டி டவுனில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் தனது 91 வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Death Notice David Houston CAPPER". www.funeraltimes.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024."Death Notice David Houston CAPPER". www.funeraltimes.com. Retrieved 26 March 2024.
  2. "Former BBC journalist David Capper dies aged 91". BBC News. 24 March 2024. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  3. "Bloody Sunday reporter 'could not believe rounds were live'". Irish Examiner. 2 February 2001. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  4. "BBC Radio Ulster - Jazz Club with Walter Love, My Kind of Jazz Ep3: David Capper". BBC. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  5. Needham, Lucy; Johns, Victoria (24 March 2024). "BBC issues statement as much-loved journalist dies with tributes pouring in". The Mirror. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கேப்பர்&oldid=3960193" இலிருந்து மீள்விக்கப்பட்டது