டேவிட் கொரேஷ்
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
டேவிட் கொரேஷ் (David Koresh, இயற்பெயர்: வெர்னான் வேய்னெ ஹொவெல், 17 ஆகத்து 1959 – 19 ஏப்பிரல் 1993) ஐக்கிய அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலம்,வகோ நகர்புறத்தில் அமைந்த மவுண்ட் கார்மல் மையத்தில் செயல்பட்ட கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான தாவீது கிறித்தவ மதப்பிரிவின் தலைவர். தன்னைத்தானே இறைவனின் இறுதி தீர்க்கதரிசி (prophet) என்றும் இறைமகன் (Son of God) என்றும் அறிவித்துக் கொண்டவர்.[2] [3].
டேவிட் கொரேஷ் | |
---|---|
பிறப்பு | வெர்னான் வேய்ன் ஹொவெல் ஆகத்து 17, 1959 ஹூஸ்டன், டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 19, 1993 மவுண்ட் கார்மல் மையம், மெக்லின்னன் கவுண்டி, டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 33)
இறப்பிற்கான காரணம் | துப்பாக்கிச் சுடல். |
உடல் கண்டறியப்பட்ட இடம் | கார்மல் மையம், டெக்சாஸ் |
கல்லறை | மெமெரியல் பூங்கா கல்லறை 32°21′23″N 95°22′03″W / 32.35640°N 95.36750°W |
இருப்பிடம் | எல்க், டெக்சாஸ், ஐக்கிய அமெரிக்கா.[1] |
பணி | டேவிட் கிறித்தவ மதப் பிரிவின் தலைவர், 1988–1993 |
அறியப்படுவது |
|
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | ரேச்செல் ஜோன்ஸ் மற்றும் 18 மனைவிகள் |
பிள்ளைகள் |
மற்றும் 12 குழந்தைகள் |
பிப்ரவரி 1993இல் டேவிட் கொரேஷின் குற்ற நடவடிக்கைகளையும், போலியான மத இயக்கத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் காவல் துறை (FBI), டெக்சாஸ் மாநிலத்தின், மெக்லென்னன் கவுண்டியின், வகோ (Waco) நகர்புறத்தில் அமைந்த டேவிட் கொரேஷின் இயக்ககத்தின் தலைமையகக் கட்டிடத்தைச் சுற்றி வளைத்து, டேவிட் கொரேஷ் உட்பட அனைவரையும் சரண் அடையக் கட்டளையிட்டனர். [4]
காவல் துறையின் ஆணையை ஏற்க மறுத்த டேவிட் கொரேஷும் அவனது கூட்டாளிகளும், 51 நாட்கள் நடந்த கடுமையான போராட்டத்திற்குப் பின், தங்கள் இயக்க கட்டிடத்திற்கு தாங்களே தீ வைத்துக்கொண்டனர். இதனால் காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் 17 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளும் உட்பட மொத்தம் 80 நபர்கள் தீயில் கருகி இறந்தனர். டேவிட் கொரேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.[5][6]
டேவிட் கொரேஷ் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மரணம் குறித்து, ஐக்கிய அமெரிக்காவில் இன்றளவும் சர்ச்சைக்குரிய விசயமாகவே பேசப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Smyrl, Vivian Elizabeth. "Elk, Texas". Handbook of Texas – Texas State Historical Association. பார்க்கப்பட்ட நாள் June 30, 2012.
- ↑ http://www.biography.com/people/david-koresh-9368416#synopsis David Koresh Biography
- ↑ http://edition.cnn.com/2011/US/04/14/waco.koresh/ Who was David Koresh?
- ↑ Valentine, Carol A. (2001), David Koresh and The Cuckoo's Egg – pt. 3, archived from the original on 2007-04-26, பார்க்கப்பட்ட நாள் 2014-12-15
- ↑ Pitts, William L. "Davidians and Branch Davidians". Handbook of Texas – Texas State Historical Association. பார்க்கப்பட்ட நாள் November 25, 2012.
- ↑ https://www.youtube.com/watch?v=s3CGyH5ftdE Day 51 -- **The True Story Of Waco**காணொளி காட்சி
- ↑ http://www.crimelibrary.com/notorious_murders/not_guilty/koresh/1.html David Koresh: Millennial Violence
வெளி இணைப்புகள்
தொகு- http://www.dailymail.co.uk/news/article-2588106/We-werent-brainwashed-Waco-cult-survivor-claims-new-memoir-Branch-Davidian-leader-David-Koresh-19-wives-slept-girls-young-12.html
- http://www.imdb.com/name/nm0466205/bio
- http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=6610999
- Day 51 -- **The True Story Of Waco**காணொளி காட்சி
- The ATF Raid the Branch Davidians காணொளி காட்சி
- Waco, The Survivors Story (Discovery Channel) காணொளி காட்சி
- David Koresh Tells The Truth About Waco