டேவிட் செமின்

டேவிட் செமின் (David Shemin) (18 மார்ச்சு 19111 - 26 நவம்பர் 1991) ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார். இவர் உடலானது தனக்கான உயிரியப் பொருள்களான இரத்தம் போன்றவற்றை உருவாக்கிக் கொள்ளும் வேதிச்செயல்முறையின் பாதையைக் கண்டறிய கதிரியக்க ஓரிடத்தான்களின் பயன்பாட்டைக் கொண்டு வந்த முன்னோடியாவார். செல்லானது உயிர்ச்சத்து பி12 மற்றும் அதைப்போன்ற வேதிப்பொருள்களைக் கொண்டு எவ்வாறு ஹீமை (ஹீமோகுளோபினில் உள்ள சிவப்பு நிறப்பொருள்) உற்பத்தி செய்யும் வளர்சிதை மாற்ற வழிமுறையைக் கண்டுபிடித்தார். சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் காலம் 127 நாள்கள் என்பதையும் கண்டறிந்தார். இவர் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "David Shemin". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_செமின்&oldid=3404159" இலிருந்து மீள்விக்கப்பட்டது