டைதயோடையசோல்

டைதயோடையசோல்கள் (Dithiadiazoles) என்பவை வேதியியலில் RCN2S2 என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள பல்லினவளையச் சேர்மங்களின் குடும்பத்தைக் குறிக்கும். பல மாற்றியன்கள் காணப்படுவதற்கு சாத்தியம் இருப்பினும் 1,2,3,5-டைதயாடையசோல்கள் மட்டுமே அதிக கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன. நடுநிலைச் சேர்மங்கள் 7 π எலக்ட்ரான்களுடன் அடிப்படைக் கூறுகள் எனப்படும் தனியுறுப்புகளாக உள்ளன. டைதயோடையசோல்களை ஆக்சிசனேற்றம் செய்து டைதயாடையசோனியம் நேர்மின் அயனிகள் பெறப்படுகின்றன[1].

1,2,3,5-டைதயாடையசோனியம் வளையத்தின் கட்டமைப்பு

தயசைல் குளோரைடுடன் நைட்ரைல்கள் சேர்த்து வினைபுரியச் செய்வதால் டைதயாடையசோனியம் நேர்மின் அயனிகளின் குளோரைடு உப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Jeremy M. Rawson, Arthur J. Banister, Ian Lavender (1995). "The Chemistry of Dithiadiazolylium and Dithiadiazolyl Rings". Adv. Heterocyc. Chem. 62: 137. doi:10.1016/S0065-2725(08)60422-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோடையசோல்&oldid=2645285" இலிருந்து மீள்விக்கப்பட்டது