டைனான் ஓவிய காட்சியகம்

டைனான் ஓவிய காட்சியகம் என்பது தைவான் நாட்டின் முதல் ஓவிய காட்சியகம் ஆகும். இது டைனான் நகரின் மத்திய மேற்கு பகுதில் அமைந்துள்ளது. உள்ளூர் ஓவிய கலைஞர்களின் நெடுநாள் உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு ஓவிய காட்சியகம். 2018 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும்.[1]

டைனான் ஓவிய காட்சியகம்

வரலாறு

தொகு

1931 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் முதல் முறையாக டைனான் காவல் துறை கட்டிடம் செயல்பட்டது. பின்னர் 1945 ஆம் ஆண்டு தைவான் ஜப்பான் நாட்டிடம் இருந்து, சீனா குடியரசு நாட்டிடம் ஒப்படைக்கபட்ட பின்பு, இக்கட்டிடம் டைனான் நகர காவல் துறை கட்டிடம் என பெயர் மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தில் இருந்து காவல் துறை தனது செயல்பாட்டை வேறு இடத்திற்கு மாற்றியது.

செல்லும் வழி

தொகு

இந்த ஓவிய காட்சியகம் டைனான் ரயில் நிலையத்தில் மிக அருகில் அமைந்துள்ளது .

கட்டிடவடிவமைப்பு

தொகு

இந்த ஓவிய காட்சியகத்தில் இரண்டு கட்டிடங்கள் அமைந்துள்ளது முதல் கட்டிடத்தில் 16 காட்சியகம் அமைந்துள்ளது.இந்த கட்டிடம் 1024 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது .சுடேஜிரோ உமேசவா என்பவரால் வடிவமைக்கப்பட்டது . இரண்டாம் கட்டிடத்தில் 17 காட்சியகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 2960 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது . ஷி ஜாவோ யோங் மற்றும் ஷிகேறு பண் என்பவரால் வடிவமைக்கப்பட்டது .இந்த காட்சியகம் பல்நோக்கு திரையரங்கு , குழந்தைகளுக்கான ஓவிய கலை மையம் ,ஓவிய கலைஞர்களின் சிறப்பு கட்சியாக தொகுப்பு ,மறுசீரமைப்பு மற்றும் ஓவிய ஆராய்ச்சி மையம்.இவ்வகை காட்சியகத்தில் தைவானில் இதுதான் முதல் காட்சியகம்.2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 1158 ஓவிய கலைப்படைப்புகள் சேகரிக்கப்பட்டன அவற்றில் சுமார் 144 வாங்கப்பட்டவை 1014 தானமாக வழங்கபட்டது

மேற்கோள்கள்

தொகு
  1. "Tainan Art Museum". Archived from the original on 2018-11-01. பார்க்கப்பட்ட நாள் 2018-11-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைனான்_ஓவிய_காட்சியகம்&oldid=3556810" இலிருந்து மீள்விக்கப்பட்டது