டைபோரைன் (Diboryne) என்பது போரான் – போரான் முப்பிணைப்பைக் கொண்டுள்ள ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். இத்தகையச் சேர்மங்கள் வேதியியல் பிணைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் அடிப்படை முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன. போரான் – போரான் முப்பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள் ஒரு சிலவே கண்டறியப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் இரண்டு கார்பனோராக்சைடு குழுக்களால் (OC)B≡B(CO) நிலைப்புத்தன்மை அடைந்த டைபோரைன் அணி தனியாக்கலில் தனிப்படுத்தப்பட்டது [1]. அறை வெப்பநிலையில் இரண்டு என்–பல்லினவளையக் கார்பீன் அலகுகளால் நிலைப்புத்தன்மை அடைந்த டைபோரைன் 2012 இல் தனிப்படுத்தப்பட்டது [2]. மூலக்கூறு வட்டணைக் கொள்கையின் அடிப்படையிலான பண்பறிபகுப்பாய்வில், போரான் மூலக்கூறுகள் மட்டும் ஒற்றைப் பிணைப்புகள் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்–பல்லினவளைய ஈந்தணைவிகளும் பெற்றிருந்தன, மூன்றாவது கிளர்வு நிலையே முப்பிணைப்புகளை அளிக்கின்றன. [3]

மேற்கோள்கள் தொகு

  1. Zhou, M; Tsumori, N; Li, Z; Fan, K; Andrews, L; Xu, Q (2002). "OCBBCO: A neutral molecule with some boron-boron triple bond character". Journal of the American Chemical Society 124 (44): 12936–7. doi:10.1021/ja026257+. பப்மெட்:12405806. 
  2. Braunschweig, H.; Dewhurst, R. D.; Hammond, K.; Mies, J.; Radacki, K.; Vargas, A. (2012). "Ambient-Temperature Isolation of a Compound with a Boron-Boron Triple Bond". Science 336 (6087): 1420–2. doi:10.1126/science.1221138. பப்மெட்:22700924. 
  3. Holzmann, N.; Stasch, A.; Jones, C.; Frenking, G. (2011). "Structures and Stabilities of Group 13 Adducts...". Chemistry: A European Journal 17 (1521-3765): 13517. doi:10.1002/chem.201101915. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைபோரைன்&oldid=2168955" இலிருந்து மீள்விக்கப்பட்டது