டையோசு

இரண்டு கார்பன் மட்டுமே கொண்ட ஒற்றைச் சர்க்கரை

டையோசு (Diose) என்பது இரண்டு கார்பன் அணுக்களைக் கொண்ட ஓர் ஒற்றைச் சர்க்கரையாகும். ஒற்றைச் சர்க்கரைகளின் பொது வாய்ப்பாடு (C•H2O)n என்பதாகும். வாய்ப்பாட்டிலுள்ள n இன் மதிப்பு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டதாக இருக்கவேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருப்பதால் டையோசு (C•H2O)n வாய்ப்பாட்டோடு பொருந்தினாலும் ஒற்றைச்சர்க்கரை என்பதற்கான முறையான வரையறைக்குப் பொருந்துவதில்லை. மிகவும் அடிப்படையான ஒரு சர்க்கரையாக டையோசு கருதப்படுகிறது. [1]

கிளைக்கோலால்டிகைடு எனப்படும் டையோசு

2-ஐதராக்சியெத்தனால் எனப்படும் கிளைக்கோலால்டிகைடு மட்டுமே சாத்தியமுள்ள ஒரே டையோசு ஆகும். இதுவோர் ஆல்டோடையோசு ஆகும். இரண்டு கார்பன்கள் மட்டுமே காணப்படுவதால் ஒரு கீட்டோடையோசு உருவாகும் சாத்தியம் இல்லை.

மேற்கோள்கள் தொகு

  1. Emil Abderhalden (1908) [1906]. Text Book of Physiological Chemistry in Thirty Lectures. New York: J Wiley & Sons. பக். 19. https://archive.org/details/textbookofphysio00abde. பார்த்த நாள்: 23 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டையோசு&oldid=3003437" இலிருந்து மீள்விக்கப்பட்டது