டோங்பைட்டு

கார்பைடு கனிமம்

டோங்பைட்டு (Tongbaite) என்பது Cr3C2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். குரோமியம் கார்பைடு உப்பான இது குரோமியத்தின் அரிய ஓர் கனிமமாகக் கருதப்படுகிறது.

டோங்பைட்டு
Tongbaite
பொதுவானாவை
வகைகார்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCr3C2
இனங்காணல்
நிறம்வெளிர் பழுப்பு மஞ்சள்; எதிரொளியில் வெளிர் ஊதா
படிக இயல்புபட்டகப் படிகங்கள், போலி அறுங்கோணம்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை8.5
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி6.64 கணக்கிடப்பட்டது
மேற்கோள்கள்[1][2][3]

முதன்முதலில் 1983 ஆம் ஆண்டில் சீன நாட்டின் எனன் மாகாணத்திற்குத் தெற்கிலுள்ள டோங்பாய் மாகாணத்திலுள்ள லியு கிராமத்தில் டோங்பைட்டு கண்டறியப்பட்டது. டோங்பாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதால் டோங்பைட்டு என்றும் பெயரிடப்பட்டது. அதிக அளவிலான மக்னீசியமும் இரும்பும் நிறைந்த தீப்பாறை வகைகளில் டோங்பைட்டு சேர்ந்து காணப்படுகிறது. திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் உருசியாவின் யூரல் மலைகள் ஆகிய பகுதிகளில் டோங்பைட்டு கண்டறியப்பட்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Tgb என்ற குறியீட்டால் டோங்பைட்டை அடையாளப்படுத்துகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Handbook of Mineralogy
  2. Mindat.org
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோங்பைட்டு&oldid=4085318" இலிருந்து மீள்விக்கப்பட்டது