டொயோட்டா உற்பத்தி முறைமை
டொயோடா உற்பத்தி முறைமை (Toyota Production System) என்பது டொயோடா மோட்டார் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முறைமையாகும். இம்முறைமை நிறுவனர் சகிச்ஹி டொயோடா, அவரது புதல்வர் கிசிரோ டொயொடா மற்றும் அந்நிறுவனத்தின் பொறியாளர் டாயிசி ஒஹ்னோ என்பவர்களால் கூட்டாக உருவக்கபட்டதாகும்.
இம்முறைமை இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உருவாக்கப்பட்டாலும், 1973ல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுபாடின்போதுதான் இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. இது டொயோடா நிறுவனத்தின் மேலாண்மை தத்துவம் மற்றும் செயல்முறையினை உள்ளடக்கியதாகும்.
இதனுடைய முந்தய பெயர் தகுந்த நேர (Just-in-Time) முறைமை என்று அழைக்கப்பட்டது. இம்முறைமையின் முக்கிய நோக்கம் விரயங்களை நீக்குதல், முரண்களை தவிர்த்தல், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்குதல் என்ற மூன்று நோக்கங்களாகும்.
இத்ததுவம் பின் வரும் 7 வகையான விரயங்களை தெளிவாக விளக்கியுள்ளது.
1. அதிகபடியான உற்பத்தி
2. நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)
3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய)
4. ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு)
5. அதிகபடியான செயல் முறை
6. இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்)
7. திருத்தம் (மறு சீர் செய்தல்)