டோரதி ஸ்டிரெய்ட்

டோரதி ஸ்டிரெய்ட் (Dorothy Straight, பிறப்பு: 25 மே 1958 வாசிங்டன், டி. சி.) அமெரிக்காவில் புகழ்பெற்ற விட்னீ குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆங்கில எழுத்தாளரும் சோவியத் ஒன்றிய உளவாளியுமான மைக்கேல் ஸ்டிரெய்ட்டின் மகள். 1962ல் அவருடைய நான்காம் வயதில் தன் பாட்டிக்கு ஹவ் த வேல்ட் பிகேன் (How the World Began) என்ற கதையை எழுதினார். அந்தக்கதை கிறித்தவ நம்பிக்கைப்படியான உலக உருவாக்கத்தைக் குழந்தையின் புரிதலின்படி காடு, விலங்குகள், பறவைகள் முதலியவற்றைக் கொண்டு உருவானது.[1]

டோரதி ஸ்டிரெய்ட்
பிறப்பு25 மே 1958 (அகவை 66)
வாசிங்டன்

டோரதி ஸ்டிரெய்ட்டால் வரையப்பட்ட விளக்கப்படங்களைக் கொண்ட அந்தக்கதையைப் பென்தியான் புத்தகங்கள் எனும் நூல் வெளியீட்டாளர்கள் 1964ல் வெளியிட்டார்கள். அந்தப்புத்தகத்தை எழுதியதன் மூலம் டோரதி ஸ்டிரெய்ட் உலகின் மிக இளைய பெண் எழுத்தாளர் என்று அறியப்படுகின்றார்.[2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரதி_ஸ்டிரெய்ட்&oldid=2734279" இலிருந்து மீள்விக்கப்பட்டது