டோலமைட்டாக்கம்

டோலமைட்டாக்கம் (Dolomitization) என்பது கார்பனேட்டு கனிமம் டோலமைட்டை உருவாக்குகின்ற ஒரு புவியியற் செயல்முறையாகும். இச்செயல்முறையில் மற்றொரு கார்பனேட்டு கனிமமான கால்சைட்டில் உள்ள கால்சியம் அயனிகளை மக்னீசியம் அயனிகள் இடப்பெயர்ச்சி செய்து டோலமைட்டு உருவாகிறது [1]. சாப்கா பகுதியில் தண்ணீர் நீராவியாக மாறுவதால் இந்த டோலமைட்டு கனிம மாற்றம் பொதுவாக நிகழ்கிறது. டோலோமைட்டாக்கம் கணிசமான அளவு மறு படிகமாக்கலை உள்ளடக்கியது ஆகும் [2]. இந்த செயல்முறையை வேதிவிகிதச் சமன்பாடு விவரிக்கிறது.

2 CaCO3(கால்சைட்டு) + Mg2+ ↔ CaMg(CO3)2(டோலமைட்டு) + Ca2+

கரைசலில் இருக்கும் குறைவான Ca:Mg விகிதம், வினைபடு பொருளின் மேற்பரப்பு, வினைபடு பொருளின் கனிமவியல் பண்புகள், திட்டத்தின் வெப்ப இயங்கியல் நிலைப்புத்தன்மையை முன்னிறுத்தும் உயர் வெப்பநிலைகள், சல்பேட்டு போன்ற இயகக தடுப்பிகளின் இருப்பு உள்ளிட்ட சிறப்பு நிபந்தனைகளை டோலமைட்டாக்கம் சார்ந்துள்ளது [2] இயக்கவியல் தடுப்பிகள் மற்றும் உயர் வெப்பநிலைகள் இணக்கமானவையாக இருந்தால், டோலமைட்டின் வெப்ப இயங்கியல் மற்றும் இயக்க நிறைவுக்கு மேற்பட்ட உப்பு சார்ந்த சூழல்களில் டோலமைட்டாக்கம் நிகழ்கிறது. இந்த வகையான சுற்றுச்சூழலில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலப்பு மண்டலங்கள், சாதாரண் உப்பு முதல் உயர் உப்பு துணையலை சூழல்கள் முதலியவை அடங்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் காரச் சூழ்நிலையிலும் டோலமைட்டாக்கம் நிகழ்கிறது. பாக்டீரியா ஒடுக்கம் மற்றும் நொதித்தல் செயல்முறைகள் முதலியவற்றின் செல்வாக்கினால் டோலமைட்டாக்கம் நிகழ்கின்றது. மற்றும் உயர் வெப்பநிலை கொண்ட அதிக உள்ளீடுள்ள கார நிலத்தடி நீர் சூழல்கள் டோலமைட்டாக்கம் நிகழ உகந்தவையாகும் [1][3][4].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோலமைட்டாக்கம்&oldid=2749993" இலிருந்து மீள்விக்கப்பட்டது