டோலி மின்ஹாஸ்
இந்திய நடிகை மற்றும் மாடல் ( model ).
டோலி மின்ஹாஸ் என்பவர் ஓர் இந்திய நடிகையும் முன்னாள் மாடலும் ஆவார். இவர் 1988ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் இந்தி, பஞ்சாபி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தில் ஸே தில் தக் என்ற தொடரில் அம்பிகா புருஷோத்தம் பானுஷாலி என்ற பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
டோலி மின்ஹாஸ் | |
---|---|
பிறப்பு | டோலி மின்ஹாஸ் 8 பெப்ரவரி 1968 சண்டிகர், பஞ்சாப் |
தேசியம் | இந்தியன் |
பணி | மாடல், நடிகை |
சமயம் | சீக்கிய மதம் |
வாழ்க்கைத் துணை | அனில் மட்டூ (1997–தற்போது வரை) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் பஞ்சாப் நாட்டில் உள்ள சண்டிகர் நகரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 1991ஆம் ஆண்டு தஸ்டூர் என்ற இந்தி படத்தின் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார், பிறகு அப்படத்தின் இயக்குநரான அனில் மட்டூவை காதலித்து மணந்துகொண்டார். பிறகு அவர் பல படங்களிலும் இந்தி தொடர்களிலும் நடித்தார்.