டோல்மேன் விதி

டோல்மேன் விதி (Tolman's Rule) என்பது குறிப்பிட்ட சில வேதியியல் வினைகளின் படிகளை, பிரத்தியேகமாக 18- மற்றும் 16 எலக்ட்ரான் கட்டமைப்பின் இடைநிலைகளை விளக்குகிறது. இவ்விதி 18-எலக்ட்ரான் விதியினுடைய ஒரு நீட்சியாகும். அமெரிக்க வேதியியலாளர் சாட்விக் அல்மா டோல்மேன் இவ்விதியை முன் மொழிந்தார்[1]

ஒருபடித்தான வினையூக்கியின் பல உதாரணங்கள் கரிமவுலோக கலப்புத்தொகுதியுடன் பங்கேற்கும். அதாவது 16 மற்றும் 18 எலக்ட்ரான் கட்டமைப்புகளுக்கிடையிலான முன்பின் இயக்கக் கரிமவுலோக கலப்புத்தொகுதியாக இவை பங்கேற்கும். பெரும்பாலும் 16-எலக்ட்ரான் கலப்புத்தொகுதிகள் இலூயிக் காரங்களுடன் வினைபுரிந்து கூட்டு விளைபொருட்களைத் தரும். ஒருவேளை குறைந்த இணைதிறன் பெற்றவையாக இருந்தால் அவை ஆக்சிசனேற்ற கூட்டுவினையில் பங்கேற்கும்.

CH3I + cis-[Rh(CO)2I2] → [(CH3)Rh(CO)2I3]

மாறாக, 18-எலக்ட்ரான் கலப்புத்தொகுதிகள் ஈதல் தொகுதிகளை பிரிந்து போகச் செய்யும் அல்லது குறைத்து நீக்கம் செய்யும்.

[Rh(PPh3)3ClH2 → [Rh(PPh3)3Cl + H2

மேற்கோள்கள்

தொகு
  1. Tolman, C.A. (1972). "The 16 and 18 electron rule in Organometallic Chemistry and Homogeneous Catalysis". Chem.Soc.Rev: 337–353. doi:10.1039/CS9720100337. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோல்மேன்_விதி&oldid=2747697" இலிருந்து மீள்விக்கப்பட்டது