டோஸ்ட்மாஸ்டர் பன்னாட்டுச் சங்கம்
டோஸ்ட்மாஸ்டர் கிளப் (Toastmasters, சொல்வேந்தர் மன்றம்) என்ற உலகளாவிய இயக்கம் பேச்சுக் கலை மற்றும் தலமைப் பண்புகளை வளர்ப்பதெற்கென உள்ள இயக்கமாகும். இந்த இயக்கம் ரால்ஃப் ஸ்மெட்லி என்பவரால் அமெரிக்காவில் 1924 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 13,000 கிளப்களில் 270,000 உறுப்பினர்கள் உள்ளனர். பேச்சுக் கலை (ஆங்கிலத்தில் மட்டுமே) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க உதவி செய்யும் டோஸ்டமாஸ்டர்ஸ் மன்றம் வருடம் இரு முறை போட்டிகளையும் நடத்துகிறது. இவை முறையே க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் என்ற பல நிலைகளில் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான போட்டியாளரின் செலவுகளை அந்தந்த க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் ஏற்றுக் கொள்ளும்.
அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பெரிதும் பிரபலமடைந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப், கடந்த ஒரிரு வருடங்களாக, இந்தியாவிலும், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பேராதரவுடன் இயங்கி வருகின்றன.
சென்னையில் மட்டும் கீழ்க்கண்ட கிளப்கள் உள்ளன
தொகு- சென்னை டோஸ்ட்மாஸ்டர் கிளப், எழும்பூர்
- சென்னை ஸ்பீக்கர்ஸ் ஃபோரம், எழும்பூர்
- மெட்லி டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப், அடையார்
- வேர்ட்ஸ்மித் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப், அண்ணாநகர்
- மெட்ராஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப், தி.நகர்
இந்தக் கிளப்கள் தவிர, கீழ்க்கண்ட கார்ப்பொரேட் நிறுவனங்களிலும் டோஸ்ட்மாஸ்டர் கிளப்கள் உள்ளன.
- எச்.சி.எல்
- சி.எஸ்.சி
- டி.சி.எஸ்
- கேட்டர்பில்லர்
- . சிஸ்பிஸ்
- சிஸ்டெக்
- காக்னிசெண்ட்
- அமேசான்
பங்காளிகள்
தொகுஇந்த கிளப்களின் கூட்டங்களில் பணி புரியும் பங்காளிகள் (roleplayers) பின்வருமாறு:.
1)ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் (Sergeant at Arms) எனப்படும் ஆயத்த நடை முறையாளர். ஒரு படைக்கு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்று எப்பொதும் பார்த்து வைத்திருக்கும் 'ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ்' போல டோஸ்ட் மாஸ்டர்ஸ் கூட்டத்திற்குத் தேவையான பொருட்களும், இடமும் தயார் நிலையில் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியதும், நிகழ்ச்சி நிரலில் இருக்கும் எல்லோரும் குறித்த நேரத்தில் வந்து விட்டார்களா என்ற் பார்ப்பதும் இவர் கடமை. குறித்த நேரத்தில் கூட்டத்தைத் துவக்குபவரும் இவரே. உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், மூன்று முக்கிய விதிகளை பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்தின் துவக்கத்தில் சொல்ல வேண்டும்.
முதல் விதி: உறுப்பினர்கள மற்றும் விருந்தினர்களின் ஆடை (Dress Code) குறித்தது. கூட்டத்திற்ககு வரும் அனைவரும் சம்பிரதாய உடையில் (Formal Dress) வரவேண்டும்.
இரண்டாம் விதி: கூட்டத்தின் அமைதி (Code of Silence) குறித்தது. கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும். யார் மேடையில் பேசிக் கொண்டிருந்தாலும் இடையிலே எழுந்து செல்லக் கூடாது. ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், துண்டுத் தாளில் எழுதி, அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும்.
மூன்றாம் விதி: தவிர்க்க வேண்டிய தலைப்புகள்க (Taboo Topics) குறித்தது. பாலியல் (Sex), மதம் (Religion), அரசியல் (Politcs) போன்ற பிரச்னை தரும் 3 தலைப்புகளில் யாரும் பேசக் கூடாது.
மேற்கண்ட மூன்று விதிகளையும் கூட்டத்தினருக்கு விளக்கிய பின், ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நபரை அறிமுகப்படுத்துவார்.
2) தலைவர்: க்ளப்பின் தலைவரே கூட்டதிற்குப் பெரும்பாலும் தலைமை தாங்குவார். இல்லையென்றால் க்ளப்பின் உப தலைவர் தலைமை தாங்குவார். இவர் க்ளப்பின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு பொதுவான உரை நிகழ்த்திவிட்டு, க்ளப்பின் புதிய அங்கத்தினர்களை அறிமுகப்படுத்துவார். பின்னர் புதிய விருந்தினர்கள் எவரேனும் வந்திருந்தால் அவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகல் செய்து கொள்ளச் செய்யச் சொல்லுவார். புதியவர்கள் அறிமுகம் முடிந்தவுடன், தலைவர் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்துவார். அவர்தான் 'டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே' எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர். (Master of Ceremony).
3) டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே (TMOD) எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர். TMOD தான் கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர். பல சுவையான கதைகளும், துணுக்குகளும் சொல்லி கூட்டத்தின் சுவாரசியம் கெடாமல் பாதுகாப்பவர். இவரும் க்ளப் உறுப்பினர்களில் ஒருவர்தான். ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டத்தின் தொகுப்பளர் யார் என்று முடிவு செய்யப்பட்டு விட்டு அவர் தயார்நிலையில் வருவார். இவர் சற்றே பகட்டான உடை அணிந்து வந்து அனவரது கவனத்தையும் கவருபரும் கூட. ஒவ்வொரு கூட்டமும், ஒரு 'பொது மதிப்பீட்டாளரால்' (General Evaluator) மதிப்பீடு செய்யப்படும். பொது மதிப்பீட்டாளரை TMOD அறிமுகப்படுத்துவார். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு "கூட்டத்திற்குண்டான கருத்தும்" (Theme of the Day) "கூட்டதிற்குண்டான வார்த்தையையும்" (Word of the Day) அறிமுகம் செய்வது இவரே. இவற்றை பேச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்.
4) பொது மதிப்பீட்டாளர் (General Evaluator). இவரும் உறுப்பினர்களில் ஒருவரே. கூட்டத்திற்குக் கூட்டம் ஒரு உறுப்பினர் இந்த வேலையைச் செய்வார். கூட்டம் துவங்கியது முதம் இறுதி வரை கூட்டம் எப்படி நடந்தது என்று கூட்டத்தின் முடிவில் நிறை-குறைகளை அழகுறப் பட்டியலிட்டுச் சொல்லுவார். இவர் குறிப்பிட்டுள்ள குறைகள் அடுத்த கூட்டத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வது அனைவரின் கடமையுமாகும். இவருக்கு உதவி செய்வதற்கென்று மூவர் அடங்கிய குழு ஒன்று உண்டு. அவர்களது பணி வருமாறு:-
5). நேரக் குறிப்பாளர் (Timer): உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், அதன் நீளம் 2 மணி நேரம் மட்டுமே. ஒவ்வொரு பேச்சாளருக்கும் அவர் பேச வேண்டிய மணித்துளிகள் ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேர வரையறை பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல. மதிப்பீட்டளர்களுக்குமுண்டு. பேச்சாளர்களும், மதிப்பீட்டாளர்களும் குறைந்த பட்ச நேரம் பேசாமலிருந்தாலோ, அதிக பட்ச நேரத்தை மீறிப் பேசினாலோ தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். நேரக் குறிப்பாளரிடம் நேரம் காட்டும் விளக்குகள் அடங்கிய கருவி (Timer Device) ஒன்றும் உண்டு. இதன் துணை கொண்ம்டு பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை முறையே ஒளிர வைத்து பேசுபவருக்கு நேரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். கூட்டத்தின் முடிவில் யார், யார் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்றும், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு யார், யார் தகுதி பெற்றார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவிப்பார்.
6) இலக்கணவாணர் (Grammarian): ஒவ்வொரு பேச்சாளரும், Theme of the Day ஐயும், Word of the Day ஐயையும் எவ்வளவு முறை பயன்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவிப்பார். மேலும் பேச்சின்போது, பயன் படுத்தப்பட்ட அழகிய சொல்லாடல்களையும், (good usage of English), இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டுவார். இதன் மூலம் பேச்சாளர் மட்டுமின்றி, அனைவரும், தவறுகளை திருத்திக் கொள்வதும், நல்ல வார்த்தைகளைப் பேச்சின் போது பயன்படுத்தும் எண்ணமும் ஏற்படுகின்றது.
7) அ-உ-எண்ணி (Ah-Counter): ஒவ்வொரு பேச்சாளரும், சரியான ஒத்திகை செய்து வரவில்லையென்றாலோ, வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதனை மறைப்பதற்காக சில நிரப்பு வார்த்தைகள் (Filler Words) கொண்டு சமாளிப்பதுவும் வழக்கம். தமிழிம் சிலர் பேசும் போது "வந்து, வந்து", "கேட்டியா? கேட்டியா?" போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு வாக்கியத்திலும் காரணமின்றிப் பலமுறை பயன்படுத்துவார்கள். கல்லூரி விரிவுரையாளர்கள் இந்த மாதிரி நிரப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, மாணவர்கள் கூர்ந்து கவனித்து எத்தனை முறை "வந்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்று குறிப்பெடுப்பது அனவரும் அறிந்ததே. 50 முறையோ அல்லது 100 முறையோ தாண்டும்போது கடைசிப் பெஞ்சு ஓவென்று ஆர்ப்பரிக்கும். அ-உ எண்ணியின் வேலையும் இதுதான். பேச்சாளர் எத்தன முறை நிரப்பு வார்த்தைகளப் பயன்படுத்தினார் என்றும், எத்தனை முறை பேசாமல் மவுனம் சாதித்தார் என்றும் தனது அறிக்கையில் கூறுவார்.
கூட்டங்கள்
தொகுஒவ்வொரு கூட்டமும் மூன்று முக்கியமான அங்கங்கள் கொண்டவை.
1) தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் (Prepared Speeches): இந்த நிகழ்வில், 3 அல்லது 4 உறுப்பினர்கள், தங்களது தயாரிக்கப்பட்ட பேச்சுக்களை நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு பேச்சும் 5-7 நிமிடங்கள் இருக்கும். புதிதாகச் சேர்ந்த உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் Competent Communicator Manualல் குறிப்பிட்டபடி 10 ப்ராஜெக்டுக்கள் செய்ய வேண்டும். இவற்றை முடிக்க 6 மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டுக்கும் தனித்தனியான் நோக்கங்கள் உண்டு. உதாரணமாக் ஒரு ப்ராஜெக்ட்டில் உடல் மொழிக்கு (Body Language) முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றொன்றில், ஒலி மொழி வேறுபாட்டிற்கு (Vocal Variety) முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டின் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும், உறுப்பினர்கள் நோக்கம் மாறாமலிருக்கும் பட்சத்தில், அவருக்குப் பிடித்த தலப்பில் பேசலாம். தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளையும் நினவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேச்சையும் மூத்த டோஸ்ட்மாஸ்டர் ஒருவர் கூர்ந்து கவனித்து, அந்தப் பேச்சும எவ்வாறு இருந்தது? அதன் நிறை-குறைகள் என்னென்ன? என்று தனது மதிப்புரையில் குறிப்பிடுவார்.
2). உடனடிப் பேச்சுக்கள் (Impromptu Speeches or Table Topics): கூட்டத்தின் இரண்டாவது அங்கம், "உடனடிப் பேச்சுக்கள்" எனப்படும் ஒரு சுவையான நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியினை நடத்த Table Topic Master (TT Master) என்ற ஒரு பாத்திரத்தினை முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் ஏற்று நடத்துவார். அவர் பல தலைப்புகளை எடுத்து வந்திருப்பர். பார்வையாளர்களிலிருந்து உறுப்பினரையோ அல்லது ஒரு விருந்தினரையோ அழைத்து அவருக்கு ஒரு தலைப்புக் கொடுப்பார். தலைப்பைப் பெற்ற நபர் 30 வினாடிகள் மட்டுமே யோசித்துப் பேச்சைத் துவக்க வேண்டும். பேச வேண்டிய நேரம் 1-30-2.30 நிமிடங்களுக்கு மட்டுமே. 1.30 நிமிடங்களுக்குக் குறைவாகவோ அல்லது 2.30 நிமிடங்களுக்கு அதிகமாகவோ பேசுபவர்கள் தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். கேட்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்த நிகழ்வு, உண்மையிலேயே அவ்வளவு எளிதல்ல. ஆனால், பழகப் பழக இதுவும் எளிதில் கைகூடும்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் முடிந்த பிறகு, நேரக் குறிப்பாளர் தகுதியிழந்த பேச்சாளர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் பெயர்களைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பார். பார்வையாளர்கள் தகுதி பெற்ற பேச்சாளர்களில் தங்களைக் கவர்ந்த தயாரிக்கப்பட்ட பேச்சாளர் (Best Prepared Speech) மற்றும் உடனடிப் பேச்சாளர் (Best Table Topic Speech) யார் என்றும் வாக்களிப்பாரகள்.
3)மதிப்புரை (Evaluations): கூட்டத்தின் பிரதான அம்சமே மதிப்புரைகளாகும். பொது மதிப்பீட்டாளர் ஒவ்வொரு பேச்சையும் கூர்ந்து கவனித்த மூத்த டோஸ்ட்மாஸ்டரை குறிப்பிட்ட பேச்சாளரின் பேச்சுக்கு (கவனிக்கவும். பேச்சாளருக்கு அல்ல; அவரது அன்றைய பேச்சுக்கு மட்டுமே) மதிப்புரை வழங்கச் சொல்வார். பேச்சாளருக்கு இந்த மதிப்புரை பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாகும். பார்வையாளர்கள் இந்த மதிப்பீட்டாளர்களில் தங்களைக் கவர்ந்தவர்கள் (Best Evaluator) யார் என்றம் மீண்டும் ஒரு முறை வாக்களிப்பார்கள்.
நேரக் குறிப்பாளர், இலக்கணவாணர், அ-உ எண்ணி ஆகியோரும் தத்தம் அறிக்கைகளை வாசிப்பார்கள். இறுதியாக பொது மதிப்பீட்டாளர் கூட்டட்த்தின் பொதுவான நிறை-குறைகளைப் பட்டியலிடுவார். இதில் கூட்டம் சரியான நேரத்திற்குத் துவங்கப்பட்டதா? வந்திருந்த விருந்தினர்கள சரியாக வரவேற்கப்பட்டார்களா? கூட்டம் நடந்த இடம் தயார்நிலையில் இருந்ததா? போன்ற நுணுக்கமான விவரங்களும் தெரிவிக்கப்படும்.
மூன்று அங்கங்களும் முடிந்த நிலையில், டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே, வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி, தலைவரிடம் மேடையை ஒப்படைப்பார். தலைவர், விருந்தினர்கள கூட்டத்தினால் பயனடைந்திருந்தால், அவர்களது கருத்தைச் சொல்லுமாறு கேட்பார். பின்னர் அன்றைய கூட்டத்தின் சிறந்த தயாரிக்கப்பட்ட பேச்சாளர், சிறந்த உடனடிப் பேச்சாளர், சிறந்த மதிப்பீட்டாளர் ஆகியோர் பெயர்களை அறிவித்து அவர்களைக் கவுரவிப்பார். வேறு ஏதும் நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில் கூட்டத்தினை அடுத்த வாரம் வரை ஒத்தி வைப்பார்.