நீளுமை

(தகடாக்குதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பருப்பொருள் பற்றிய அறிவியலில், நீளுமை (Ductility) அல்லது கம்பியாக  நீட்டக்கூடிய பண்பு என்பது, ஒரு திடப்பொருளுக்குரிய திறனாகும். இது பொதுவாக பொருளை கம்பியாக நீட்டக்கூடிய திறனைப் பற்றியது.[1]தகடாகுமை (Malleability) இதே போன்ற ஒரு பண்பாகும். ஒரு பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது இது நிகழும். இது பொதுவாக அடித்தல் அல்லது உருட்டுதலால் நிகழும். இந்த இரண்டும் இயந்திரவியல் பண்புகள் ஆகும். இது பொதுவாக வெப்பம் மற்றும் அழுத்தத்தைச் சார்ந்தது. கம்பியாக நீட்டக்கூடிய பண்பும் தகடாக்குமை இரண்டும் ஒன்றல்ல. தங்கத்திற்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு, தகடாக்குமை பண்பு ஆகிய இரண்டுமே அதிகம். காரீயத்திற்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு அதிகம் தகடாக்குமை குறைவு. நீளுமைப் பண்பை அதிகமாகப் பெற்ற சில உலோகங்களாக தங்கம் மற்றும் தாமிரம் இருக்கின்றன.[2] இருப்பினும், அனைத்து உலோகங்களும் நீளுமைப் பண்பில் தோல்வியடைவதில்லை. வார்ப்பிரும்பு போன்ற சில உலோகங்கள் நொறுங்கும் தன்மையைப் பெற்றுள்ளன.[3]

 AlMgSi  உலோகக்கலவையின் வளைக்கும் திறன் சோதனை
வார்ம்பிரும்பின் குறைந்த தகடாக்கும்  பண்பு

பருப்பொருள் அறிவியல்

தொகு
 
தங்கத்திற்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு மிக அதிகம்

கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய பண்பு குறிப்பாக உலோக வேலைகளில் மிக முக்கியமானது.

மேற்கோள்கள்

தொகு
  1. Brande, William Thomas (1853). A Dictionary of Science, Literature, and Art: Comprising the History, Description, and Scientific Principles of Every Branch of Human Knowledge : with the Derivation and Definition of All the Terms in General Use. Harper & Brothers. p. 369.
  2. Chandler Roberts-Austen, William (1894). An Introduction to the Study of Metallurgy. London: C. Griffin. pp. 16.
  3. Ductility and its effect on material failure. The Engineering Archive. (n.d.). https://theengineeringarchive.com/material-science/page-ductility-material-failure.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீளுமை&oldid=3581128" இலிருந்து மீள்விக்கப்பட்டது