தகடூர் வரலாறும் பண்பாடும் (நூல்)
தகடூர் வரலாறும் பண்பாடும் என்னும் தலைப்புடன் கூடிய நூல் இன்றைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இதன் ஆசிரியர் முனைவர் இரா. இராமகிருட்டிணன். சூன் 2008 இல் முதற் பதிப்பாக வெளிவந்த இந்த நூலை, ராயப்பேட்டை, சென்னையைச் சேர்ந்த ராமையா பதிப்பகத்தினர் வெளியிட்டனர். இந்நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் “நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
ஆசிரியர்
தொகுஇந்நூலின் ஆசிரியர் மூனைவர் இரா. இராமகிருட்டிணன். இவர் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் பிறந்து பெங்களூரில் வாழ்ந்துவருபவர்.
நூல் அமைப்பு
தொகுதகடூர் வரலாறும் பண்பாடும் என்னும் இந்நூல் அரசியல், வாழ்வியல் என்னும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. அரசியல் என்னும் பெரும் பிரிவில் தொல்பழங்காலம் முதல் இன்றுவரை தகடூர் பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாற்றைப் பதினெட்டு உட்தலைப்புகளின் கீழ் ஆராயும் இந்நூல், வாழ்வியல் என்னும் பிரிவில் சமுதாயம் முதல் நாட்டுப்பறவியல் முடிய ஆறு உட்தலைப்புக்களின் கீழ் மக்கள் சமூக வாழ்க்கையைத் தெளிவாகப் பிரித்து ஆராய்கிறது.[1]
நூலின் உட்பிரிவுகள்
தொகு- அரசியல்
- தொல் பழங்காலம்
- சங்க காலம்
- சங்க காலத்துக்குப் பின்பு
- பல்லவர் காலம்
- கங்கர் காலம்
- பாணர் காலம்
- நுலம்பர் காலம்
- சோழப் பெருவேந்தர் காலம்
- ஒய்சாலர் காலம்
- விசயநகரப் பெருவேந்தர் காலம்
- பாராமகாலும் ஜெகதேவராயர்களும்
- மைசூர் உடையார்கள் காலம்
- ஐதர் அலி -திப்பு சுல்தான் காலம்
- ஆங்கிலேயர் காலம்
- குடி-நாட்டுப் பிரிவுகள்-அரசியல்
- காசுகள்
- அளவைகள்
- வருவாய்
- வாழ்வியல்
- சமுதாயம்
- வேளாண்மையும் நீர்ப்பாசனமும்
- வணிகம்
- சமயம்
- இலக்கியமும் கலைகளும்
- நாட்டுப்புறவியல்[2]