தகுர்பாரி கோயில்

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரில் இருக்கும் ஒரு கோயில்

தகுர்பாரி கோயில் (Thakurbari Temple) இந்தியாவின் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஓர் இந்து கோவிலாகும். சிக்கிமில் உள்ள பழமையான இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சிக்கிமின் முற்கால மன்னர்கள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் 1935 ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. [1] கோயிலில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தெய்வங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. காங்டாக்கின் இந்து சமூகத்தினை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய மையமாகவும் இக்கோயில் உருவெடுத்துள்ளது. 1945-47 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயில் ஒரு பெரிய கோயில் வளாகமாக மேம்படுத்தப்பட்டது. [2]

தகுர்பாரி கோயில்
Thakurbari Temple
தகுர்பாரி கோயில் is located in சிக்கிம்
தகுர்பாரி கோயில்
சிக்கிம் மாநிலத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:சிக்கிம்
மாவட்டம்:கேங்டாக், கிழக்கு சிக்கிம் மாவட்டம்
அமைவு:கேங்டாக்
ஆள்கூறுகள்:27°19′48″N 88°36′48″E / 27.3301°N 88.6132°E / 27.3301; 88.6132
கோயில் தகவல்கள்

2011 ஆம் ஆண்டில், கோயில் வளாகம் பல்நோக்கு மண்டபம் மற்றும் நூலகத்தை உள்ளடக்கியதாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது. [3]. 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி கோயிலானது நிதி பற்றாக்குறையால் முழுமையடையாமல் நிறுத்தப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/bot/pdf/bot_1995_01_18.pdf
  2. "Gangtok Tourist Attractions". Gangtok Hotels. Archived from the original on 18 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2 October 2011.
  3. "Thakurbari to be completed within a year". iSikkim.com. 8 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகுர்பாரி_கோயில்&oldid=3170290" இலிருந்து மீள்விக்கப்பட்டது