தக்கடி என்பது ஒரு இலங்கை உணவாகும்.[1] அரிசி மாவினை சிறு உருண்டைகளாக இட்டு இந்த தக்கடியை செய்கின்றனர். தக்கடி செய்யும் போது கோழிகறி, ஆட்டுக்கறி, மீன் என எதனையும் இணைத்து செய்யலாம்.

ஆட்டுக்கறி தக்கடி செய்முறை

தொகு

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, அலசி எடுத்த ஆட்டுக்கறி, மிளகாய் தூள், மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும். அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ,துருவிய தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை அரிசி மாவில் சேர்க்கவும்.

ஆட்டுக்கறி குழம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரிசி மாவினை பிசைந்து ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அவற்றை உடையாமல் குழம்பில் இட்டு பத்து நிமிடங்கள் வேக விட்டால் தக்கடி தயாராகிவிடுகிறது.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கடி&oldid=4051905" இலிருந்து மீள்விக்கப்பட்டது