தக்கார் (கோயில்)

தக்கார் (ஆங்கில மொழி: Trustee) என்பது கோயில்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட பதவிகளுள் ஒன்றாகும்.[1] 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைத்துறைச் சட்டம் பிரிவு 54(3) பின்வரும் சூழ்நிலைகளில் இணை ஆணையரோ அல்லது நேர்வுக்கேற்ப துணை ஆணையரோ பரம்பரை அறங்காவலரின் பதவிப்பணிகளை நிறைவேற்றும் பொருட்டு சமய நிறுவனங்களில் தக்காரை நியமிக்க வகைசெய்துள்ளது:

  • பரம்பரை அறங்காவலர் பதவியில் நிலையான அல்லது தற்காலிகமான காலியிடம் ஏற்பட்டு அந்தப் பதவிக்கான வாரிசுரிமை பற்றி பூசல் ஏற்பட்டுள்ளபோது (அல்லது)
  • அத்தகைய காலியிடத்தை உடனடியாக நிரப்பும் நிலை இல்லாதபோது (அல்லது)
  • பரம்பரை அறங்காவலர் இளையராக (minor) இருந்து
    • அவருக்கு காப்பாளராகச் செயல்படுவதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர் இல்லாதபோது (அல்லது)
    • காப்பாளராகச் செயல்படுவதற்கு உரிமை கொண்டவரைப் பற்றிப் பூசல் இருக்கும்போது (அல்லது)
  • பரம்பரை அறங்காவலர் மன/உடல்நலக் குறைபாடு/சீர்கேடு/தளர்ச்சி காரணமாக தமது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்ற இயலாமல் இருக்கும்போது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "வடபழனி முருகன் கோவில் தக்காராக 'தினமலர்' ஆதிமூலம் நியமனம்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2202068. பார்த்த நாள்: 30 January 2019. 
  2. 1959ஆம் ஆண்டு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டம் (PDF). தமிழ்நாடு அரசு. p. 43. Archived from the original (PDF) on 2016-01-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-25.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கார்_(கோயில்)&oldid=3214928" இலிருந்து மீள்விக்கப்பட்டது