தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது தக்காளி சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும்

சாகுபடி முறைகள்: தொகு

நாற்றங்கால்
  1. சரியான வடிகால் வசதியுடன் நாற்றங்காலை அமைப்பது மண் மூலம் தோன்றும் நோய்களை தவிர்க்க உதவும்.
  2. குழித்ததட்டு நாற்றங்காலில் 300 கிலோ தென்னை நார்க்கழிவிற்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கலந்து இடுதல் வேண்டும்.
  3. நச்சுயிரி நோய்களுக்கு எதிர்ப்பு தன்மையுள்ள கலப்பின இரகங்களை தேர்வு செய்தல் வேண்டும்.
  4. நாற்றங்காலில் உபயோகப்படுத்தும் வலைகள் சாறுண்ணும் பூச்சிகள் நுழையாதவாறு இருக்க வேண்டும்.
  5. நாற்றங்காலில் ஒத்த வயதுடைய நாற்றுக்கள் ஒரே இடத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
வயல்
  1. ஒரு வரிசை செண்டு மல்லியை 14 வரிசை தக்காளிக்கு நடுவே தடுப்பு (அ) கவர்ச்சி பயிராக பயிர் செய்தல் வேண்டும்.
  2. இரகங்களுக்கு 60 x 45 செ.மீ மற்றும் கலப்பினங்களுக்கு 90 x 60 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடுதல் வேண்டும்.
  3. இலைத்துளைப்பான் பாதிப்பை தவிர்க்க 5சதம் வேப்பங்கொட்டை கரைசலை நட்ட 15வது நாள் தெளிக்க வேண்டும்.

இயந்திர முறைகள் தொகு

  1. இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைப்பதன் மூலம் காய்ப்புழு தாய் அந்துப்பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க இயலும்.
  2. காய்ப்புழுவின் முட்டைகளை மேற்பகுதி மூன்று இலைகளை கண்காணிப்பதின் மூலம் சேகரித்து அழிக்க இயலும்.

உயிரியல் முறைகள் தொகு

  1. முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒரு லட்சம் / எக்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் இருந்து ஆறு முறை விடுதல் வேண்டும்.
  2. தக்காளி காய்ப்புழுவின் நச்சுயிரி (ஹெலிக்கோவெர்பா நச்சுயிரிஏஹசல்ஸ்)யை ஆரம்ப கட்டத்தில் மூன்று முறை தெளித்தால் காய்ப்புழுவின் எண்ணிக்கையை குறைக்கும்.
  3. பாதிக்கப்பட்ட பழங்கள், நச்சுயிரிதாக்கப்பட்ட மற்றும் வாடல் நோய் தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

ரசாயன முறைகள் தொகு

  1. காய்ப்புழுவின் பாதிப்பை குறைக்க

ஏமாமெக்டின் பென்ஜோயேட் -0.5 மிலிஃலி (அ) குளோர்நைட்ரோப்ரோனோஸ் -0.5 மிலிஃலி (அ) ஸ்பைனோசேட் -0.5 மிலி லி (அ) பேசில்லஸ் துhpஞ்சியன்ஸிஸ் -2 கி/லி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்.

  1. முன்கருகல் நோயைத் தவிர்க்க மேங்கோசெப் 2 கி/லி தெளிக்கலாம்.
  2. சேடிகளை சரியாக கட்டுவது பறவைக் கண் நோயை தவிர்க்க உதவும்.
  3. பாக்டீரியல் வாடல் நோயை தவிர்க்க ப்ளிச்சிங் பவுடர் 12 கிலோ/எக்டர் இடுதல், streptomycin தெளித்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

உசாத்துணை தொகு

  • வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பங்கள் (நூல்), 2017 ஜூன், வேளாண்மைத் துறை, தர்மபுரி