தக்காளி காய்ச்சல்

கை, கால் மற்றும் வாய் நோய் என்பது வைரசால் ஏற்படும் பொதுவான நோய்த்தொற்று ஆகும். திருவனந்தபுரம் கன்யாகுமாரி மாவட்டங்களில் இந்நோயை தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது காய்ச்சலுடனும் உடல்சோர்வுடனும் தொடங்கும். ஓரிரு நாட்களில் சிவந்த புள்ளிகள் அல்லது நீருடன் கூடிய கொப்புளங்கள் கைகளிலும் கால்களிலும் வாயிலும் கவட்டை பகுதியிலும் தென்படும். சில சமயங்கலில் புட்டதிலும் காணப்படும். வைரசு உடலை அடைந்து மூன்று முதல் ஆறு நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும். தடிப்புகள் அல்லது கொப்புளங்கள் ஒரு வாரத்தில் நீங்கிவிடும். சில வாரங்களில் கை கால் நகங்கள் விழுந்துவிடலாம் ஆனால் காலப்போக்கில் மீண்டும் வளர்ந்துவிடும்

இந்த நோய் குழந்தைகளை எளிதாக தாக்கும். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள பெரியவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட சிறிதளவு வாய்ப்புள்ளது

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளி_காய்ச்சல்&oldid=2781722" இருந்து மீள்விக்கப்பட்டது