தஙராங் துர்க்கை அம்மன் ஆலயம்

தஙராங் துர்க்கை அம்மன் ஆலயம் (Tangerang Durga Amman temple) இந்தோனேசியாவில் உள்ள ஒரு துர்க்கை அம்மன் கோயில். இது தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 20 கிமீ தூரத்தில் தஙராங் என்ற மாநகரத்தில் அமைந்துள்ளது. தஙராங் நதிக்கரையில் இந்தக் கோவில் ஜகார்த்தாவில் உள்ள தமிழர் வழிபாட்டு இடங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய ராஜ கோபுரத்துடனும் பெரிய விதானங்களுடனும் இந்த கோயில் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடிப் பெருவிழா தொகு

ஆண்டுதோறும் ஆடிப்பெருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் ஜகார்த்தா மற்றும் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான தமிழ் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் போது அன்னதானம், பூமிதித்தல், அலகு குத்துதல் மற்றும் அம்மன் தேர்பவனி போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன[1].

மேற்கோள்கள் தொகு

  1. "இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-21.