தங்குதன் ஐந்தாக்சைடு

தங்குதன் ஐந்தாக்சைடு (Tungsten pentoxide) என்பது W2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பண்டைய நூல்களில் இது சேர்மமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் W18O49 என்ற வேதி விகிதவியல் அளவுகள் நிருபிக்கப்பட்டுள்ளன[1]. சிலவேளைகளில் இச்சேர்மம் நீலக்கனிமம் என்றும் அழைக்கப்படுகிறது. தங்குதன் மூவாக்சைடும் தங்குதன் உலோகமும் 700° செ[1] வெப்பநிலையில் வினைபுரிந்து இந்த நீலநிறத் திண்ம தங்குதன் ஐந்தாக்சைடு உருவாகிறது.

தங்குதனின் இடையின ஆக்சைடுகள் தொகு

தங்குதன் மூவாக்சைடும் தங்குதன் உலோகமும் வினைபுரியும் போது வழக்கத்திற்கு மாறான பல இடையின ஆக்சைடுகள் , W20O58, W24O70[1]. W18O49 போன்றவை தோன்றுகின்றன. இவற்றில் எண்முக மற்றும் ஈரைங்கூம்பு உலோக ஒருங்கிணைவுகளை ஆக்சிசன் அணுக்கள் ஏற்படுத்துகின்றன[1].

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்_ஐந்தாக்சைடு&oldid=2697199" இலிருந்து மீள்விக்கப்பட்டது