தசமணி மாலை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் ‘மதுரைவாசி நிரம்ப அழகிய தேசிகர்’ என்று இந்நூலின் பதிப்பு ஒன்று கூறுகிறது. [2]

இந்த நூல் 10 முதல் 14 சீர்கள் கொண்ட விருத்தப்பாடல்களால் ஆன நூல். இதன் பாடல்கள் நாதாந்த குருவே, திகாந்த குருவே, கமலை ஞானசம்பந்த குருவே, என்றெல்லாம் முடிகின்றன. பதிப்பு-நூல் குறிப்பிடும் அழகிய தேசிகரும், ஞானசம்பந்த குருவும் [[கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்கள் என்றும் இரு மாணாக்கர்களில் ஒருவர் மற்றொருவர்மீது நூல் பாடினார் என்னும் கருத்து பொருந்தாது என்றும் மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். இந்த நூல் திருஞான சம்பந்தர்மீது பாடப்பட்ட நூல் என அவர் கருதுகிறார்.

இந்நூலிலுள்ள பாடல்களில் ஒரு பாடலில் வரும் ஓர் அடி: எடுத்துக்காட்டு

ஞானப்ர காசகுரு குருவே எனக்கூறி

நாத்தழும் பேற்று குருவே
நாதாந்த குருவே திகாந்தகுரு வேகமலை
ஞானசம் பந்த குருவே. (14 சீர் கொண்ட விருத்த அடி)

பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ள இந்த அடி

ஞானப்ரகாச குரு குருவே எனக் கூறி

நாத்தழும்பு ஏற்று குருவே
நாதாந்த குருவே திகாந்த குருவே கமலை
ஞானசம்பந்த குருவே.

கருவிநூல்

தொகு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. 10 பாடல் கொண்ட நூல் தசமணி மாலை
  2. ‘மதுரைவாசி நிரம்ப அழகிய தேசிகர் அருளிய ஞானசம்பந்த குரு தசமணி மாலை’ என்னும் பெயருடன் ப. அ. முத்துத் தாண்டவராய பிள்ளை பதிப்பு 1930
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசமணிமாலை&oldid=1414641" இலிருந்து மீள்விக்கப்பட்டது