தசுனிம் மிர்
தசுனிம் மிர் (பிறப்பு 13 மே 2005) இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியர் எனும் சாதனை படைத்துள்ளார். [1]
தொழில் வாழ்க்கை
தொகு- 2021 ஆம் ஆண்டில், பல்கேரிய இளையோர் வாகையாளர் பட்டம் , சர்வதேச ஆல்ப்சு மற்றும் பெல்ஜிய இளையோர் வாகையாளர் பட்டம் . [4]
- 2021 ஆம் ஆண்டில், தாமசு மற்றும் உபெர் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார். [1]
- 2017 ஆம் ஆண்டு புல்லேலா கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்றார். [5]
- 2020 ஆம் ஆண்டு முதல், குவகாத்தியில் உள்ள அசாம் இறகுபந்தாட்ட அகாதமியில் பயிற்சியினைத் தொடங்கினார்.
- 14 வயதில் இந்திய தேசிய இளையோர் வாகையாளர் (U-19) பட்டம் வென்றார்.
- 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தேசிய வாகையாளர் பட்டம் வென்றார்.
- 2018 ஆம் ஆண்டில், ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடத்தப்பட்ட அகில இந்திய கீழ் இளையோர் தரவரிசைப் போட்டிகளின் போது முறையே U-15 ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை வென்றார்.
- 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வாகையாளர் போட்டியில் பங்கேற்றார்.
- 2019 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய U-17 மற்றும் U-15 இளையோர் வாகையாளர் கோப்பையினை வென்றார்.
- 2020 இல், நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற ஜனாதிபதி வாகையாளர் கோப்பை நேபாள இளையோர் சர்வதேச தொடரை வென்றது. [6]
தனிப்பட்ட விவரம்
தொகுஇவரது தந்தை குஜராத் காவல்துறையில் பணிபுரியும் இர்பான் மிர் ஆவார். [1] [7]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Tasnim Mir becomes first Indian to claim world no 1 status in u-19 girls singles". The Indian Express. 12 January 2022. https://indianexpress.com/article/sports/badminton/tasnim-mir-becomes-first-indian-to-claim-world-no-1-status-7719830/.
- ↑ "Gujarat shuttler Tasnim Mir, trained in Hyderabad, now under 19 category". Times of India. 13 January 2022. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/gujarat-shuttler-tasnim-mir-trained-in-hyderabad-now-under-19-world-no-1/articleshow/88865825.cms.
- ↑ "Junior high for Tasnim Mir". tribuneindia.com. 13 January 2022. https://www.tribuneindia.com/news/sports/junior-high-for-tasnim-mir-360739.
- ↑ "Tasnim Mir becomes first ever Indian World No. 1 in junior women's singles". Bridge.in. 12 January 2022. https://thebridge.in/badminton/16-year-tasnim-mir-bwf-junior-girls-singles-world-number-1-28249.
- ↑ "Tasnim Mir, first Indian girl to become junior world No.1". msn.com. 12 January 2022. https://www.msn.com/en-in/sports/other/tasnim-mir-first-indian-girl-to-become-junior-world-no-1/ar-AASHzVn?ocid=XMMO.
- ↑ "Tasnim Mir: Meet The First Indian Under-19 Badminton Player To Rank World Number One". shethepeople.tv. 12 January 2022. https://www.shethepeople.tv/shesport/tasnim-mir-first-indian-junior-world-no-1-badminton-player/.
- ↑ "tasnim-mir-strengths-and-weakness". khelnow.com. https://khelnow.com/olympic-sports/badmiton-tasnim-mir-strengths-and-weakness.