தஞ்சாவூர் ஓபல்நாயக் பங்க் ஆஞ்சநேயர் கோயில்
தஞ்சாவூர் ஓபல்நாயக் பங்க் ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் சகாநாயக்கர் தெருவில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுதஞ்சாவூர் அரண்மனையின் வடக்கு வாயிலில் இக்கோயில் உள்ளது. செவ்வப்ப நாயக்கர் மற்றும் ரகுநாத நாயக்கர் காலங்களில் இந்த வாயில் சிறப்போடு இருந்தது. ஓபல் நாயக், நாயக்கர் காலத்தில் வடக்கு வாயிலுக்கு அருகே தங்கியிருக்கலாம். அதனால் இப்பகுதிக்கு ஓபல் நாயக் பங்க் என்று பெயர் அழைக்கப்பட்டிருக்கலாம். [1] 1997இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.
மூலவர்
தொகுஇங்குள்ள மூலவர் ஓபல்நாயக் பங்க் ஆஞ்சநேயர் என்றும் ஓப்பல் நாயக்கர் பஃக் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுகிறார். சன்னதிக்கு முன்பாக வலப்புறம் கிருஷ்ணன், நாகம், அனுமார் உள்ளனர். இடப்புறத்தில் கிருஷ்ணன் உள்ளார். அதற்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார்.
மூலவர் அமைப்பு
தொகுகோயிலிலுள்ள மூலவர் ஐந்தடி உயரத்தில் நின்ற நிலையில் அஞ்சலி முத்திரையுடன் உள்ளார். இடது கால் சற்றே முன்புறமாக வளைந்து குதிகால் உயர்ந்துள்ளது. சற்றே சாய்ந்த நிலையில் ஒய்யாரமாக அவர் காணப்படுகிறார். [1]