தஞ்சாவூர் காளியம்மன் கோயில்
தஞ்சாவூர் காளியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயிலாகும்.
தஞ்சாவூர் காளியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காளிகாபரமேசுவரி |
அமைவிடம்
தொகுஇக்கோயில் தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலை காளிகாபரமேசுவரி கோயில் என்றும் அழைக்கின்றனர்.
அமைப்பு
தொகுநுழைவாயில் ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்தில் வலப்புறம் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில் ஒரு சன்னதி போல உள்ளது. இடது புறத்தில் பால தண்டாயுதபாணி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் கொடி மரம் உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக கொடி மரம் உள்ளது. மூலவராக காளிகாபரமேசுவரி எனப்படும் காளிம்மன் உள்ளார். திருச்சுற்றில் கிணறு துளசி மாடம் உள்ளது. திருச்சுற்றில் இடது புறம் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, சிவலிங்கம், நாகர்கள், பாணம், ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.
தேவஸ்தான கோயில்
தொகுதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
குட முழுக்கு
தொகுஇக்கோயிலில் 15 செப்டம்பர் 1978 மற்றும் 29 ஆகஸ்டு 1988 ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.